Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/கால்நடைகள் மீது கவனம் செலுத்துங்க! சுத்தமான தண்ணீர் அளிக்க அறிவுரை

கால்நடைகள் மீது கவனம் செலுத்துங்க! சுத்தமான தண்ணீர் அளிக்க அறிவுரை

கால்நடைகள் மீது கவனம் செலுத்துங்க! சுத்தமான தண்ணீர் அளிக்க அறிவுரை

கால்நடைகள் மீது கவனம் செலுத்துங்க! சுத்தமான தண்ணீர் அளிக்க அறிவுரை

ADDED : பிப் 23, 2024 11:23 PM


Google News
உடுமலை:கால்நடைகளுக்கு, தினமும் முறையாக தண்ணீர் அளிக்க வேண்டும் என, கால்நடை டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

உடுமலை மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில், விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இதற்கு அடுத்தபடியாக, கால்நடை வளர்ப்பு இடம் பிடிக்கிறது. பால் உற்பத்திக்காக, கால்நடைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.

முன்னதாகவே துவங்கிய கோடை வெயிலின் தாக்கத்தால், பல பகுதிகளில் நிலவும் வறட்சியால், நீர்நிலைகள் வறண்டு காணப்படுகின்றன. மேய்ச்சலில் ஈடுபடும் கால்நடைகளுக்கு, தேவையான தண்ணீரும் கிடைப்பதில்லை.

கால்நடைகளின் உடலில் நீர்ச்சத்து குறைபாட்டினால், செரிமானக்கோளாறு ஏற்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதற்கு கால்நடைகளுக்கு, தினமும் முறையாக தண்ணீர் அளிக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கால்நடை டாக்டர்கள் கூறியதாவது:

கால்நடைகளுக்கு வழங்கப்படும் தண்ணீரின் அளவை குறைக்கக்கூடாது. அவற்றின் உடம்பில் பல உறுப்புகள் இயங்குவதால், அதன் வாயிலாக வெளிப்படும் கழிவுப்பொருட்கள் தோல், சிறுநீரகம், நுரையீரல் வழியாக திரவ நிலையிலேயே வெளியாகும். எனவே, அதன் உடலில் வெப்பநிலை சீராக இருக்க தண்ணீர் அவசியம். அதேபோல், உள்ளுறுப்புகள் மற்றும் வெளியுறுப்புகள் சுத்தமாக வைத்துக்கொள்ள தண்ணீர் உதவுகிறது.

மேலும், உணவை அசை போடவும், இரையை விழுங்கவும் தண்ணீர் தேவைப்படுகிறது. எனவே கால்நடைகளின் தண்ணீர் தேவையை எந்த நேரத்திலும் பூர்த்தி செய்ய, விவசாயிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.

தண்ணீர் குடிக்கும் அளவு குறையும் போது, செரிமானத்தன்மை சத்துக்களை உட்கிரகித்தல், கழிவுப்பொருட்களை வெளியேற்றுதல் போன்ற செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்படுகிறது.

நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால், கறவை மாடுகளுக்கு நான்கு அல்லது ஐந்து முறை தண்ணீர் அளிக்க வேண்டும். கால்நடைகளை கோடை வெப்பத்தில் இருந்து பாதுகாக்கலாம்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us