/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பாக்ஸ் ஸ்ரீசாய் பக்தர்கள் நகர சங்கீர்த்தனம் பாக்ஸ் ஸ்ரீசாய் பக்தர்கள் நகர சங்கீர்த்தனம்
பாக்ஸ் ஸ்ரீசாய் பக்தர்கள் நகர சங்கீர்த்தனம்
பாக்ஸ் ஸ்ரீசாய் பக்தர்கள் நகர சங்கீர்த்தனம்
பாக்ஸ் ஸ்ரீசாய் பக்தர்கள் நகர சங்கீர்த்தனம்
ADDED : செப் 22, 2025 12:44 AM

ஸ்ரீ சத்ய சாய்பாபா பக்தர்கள் சார்பில், ஸ்ரீசத்யசாய் சேவா நிறுவனம் மூலம் அதிகாலை நகரசங்கீர்த்தனம் நிகழ்வு மாதம் தோறும் திருப்பூரில் நடத்தப்படுகிறது.
அவ்வகையில், ராயபுரம் பகுதியில் நேற்று இந்நிகழ்ச்சி நடைபெற்றது. ராயபுரம் சித்தப்பா அவென்யூ பகுதியில் நடந்த நிகழ்வில் நேற்று அதிகாலை ஓம்காரம் மற்றும் சுப்ரபாதம் இசைக்கப்பட்டது. அதையடுத்து ஜோதி தியானமும், தொடர்ந்து நகர சங்கீர்த்தனமும் நடைபெற்றது. ஸ்ரீசத்ய சாய் இளைஞர்கள் சாய்பாபாவின் பஜன் பாடல்களை இசைத்த வண்ணம் ராயபுரம் பகுதி முக்கிய வீதிகள் வழியாகச் சென்றனர்.