/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கோவை - திருப்பதி, ராமேஸ்வரம் ரயில் தினமும் இயக்க பயணிகள் வலியுறுத்தல் கோவை - திருப்பதி, ராமேஸ்வரம் ரயில் தினமும் இயக்க பயணிகள் வலியுறுத்தல்
கோவை - திருப்பதி, ராமேஸ்வரம் ரயில் தினமும் இயக்க பயணிகள் வலியுறுத்தல்
கோவை - திருப்பதி, ராமேஸ்வரம் ரயில் தினமும் இயக்க பயணிகள் வலியுறுத்தல்
கோவை - திருப்பதி, ராமேஸ்வரம் ரயில் தினமும் இயக்க பயணிகள் வலியுறுத்தல்
ADDED : மே 20, 2025 06:59 AM

திருப்பூர் : ரயில் டிக்கெட் முன்பதிவு, கூட்ட நெரிசல் அதிகரிப்பதால், கோவையில் இருந்து திருப்பூர், ஈரோடு வழியாக திருப்பதி மற்றும் ராமேஸ்வரத்துக்கு இயக்கப்படும் ரயில்களை தினசரி இயக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.
கோவையில் இருந்து ஈரோடு, சேலம் வழியாக திருப்பதிக்கு ஞாயிறு, செவ்வாய், வியாழன், வெள்ளி ஆகிய நான்கு நாள் ரயில் (எண்: 22616) இயக்கப்படுகிறது. காலை, 6:10மணிக்கு இயக்கப்படும் ரயில் மதியம், 1:20 மணிக்கு திருப்பதி செல்கிறது. கோவையில் இருந்து ராமேஸ்வரத்துக்கு, செவ்வாய் தோறும் ரயில் (எண்:16618) இயங்குகிறது. இரவு, 7:45 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 6:15 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடைகிறது.
கோவை, திருப்பூர், ஈரோடு அடங்கிய மேற்கு மண்டலத்தில் இருந்து திருப்பதி, ராமேஸ்வரம் பயணிக்கும் பயணிகளுக்கு கோவையில் இருந்து இந்த இரு ரயில் மட்டுமே உள்ளது. திருப்பதி ரயில் வாரத்தின் நான்கு நாட்கள் மட்டுமே இயங்குகிறது. ராமேஸ்வரம் ரயில் செவ்வாய் மட்டுமே இயங்குகிறது. ஆறு நாட்கள் இல்லை.
இதனால், திருப்பதி, ராமேஸ்வரம் கோவிலுக்கு புனித பயணம் மேற்கொள்ளும் பக்தர்கள் ஏமாற்றம் அடைகின்றனர்.
கோடை விடுமுறை மட்டுமின்றி, பிற வார நாட்களிலும் இவ்விரு ரயில்களுக்கு முன்பதிவு, கூட்ட நெரிசல் அதிகரித்து வருவதால், கோவை - திருப்பதி, கோவை - ராமேஸ்வரம் ரயிலை தினசரி இயக்க வேண்டும் என்ற கோரிக்கையை மேற்கு மண்டல பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.