/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/பி.ஏ.பி., முதல் மண்டல பாசனத்துக்கு நாளை நீர் திறப்பு: 94,521 ஏக்கர் பயன்பி.ஏ.பி., முதல் மண்டல பாசனத்துக்கு நாளை நீர் திறப்பு: 94,521 ஏக்கர் பயன்
பி.ஏ.பி., முதல் மண்டல பாசனத்துக்கு நாளை நீர் திறப்பு: 94,521 ஏக்கர் பயன்
பி.ஏ.பி., முதல் மண்டல பாசனத்துக்கு நாளை நீர் திறப்பு: 94,521 ஏக்கர் பயன்
பி.ஏ.பி., முதல் மண்டல பாசனத்துக்கு நாளை நீர் திறப்பு: 94,521 ஏக்கர் பயன்
ADDED : பிப் 10, 2024 11:41 PM
உடுமலை;திருப்பூர் மாவட்டம், உடுமலை, திருமூர்த்தி அணையிலிருந்து, பி.ஏ.பி., முதல் மண்டல பாசனத்துக்கு நாளை தண்ணீர் திறக்கப்படுகிறது.
பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன திட்டத்தில் (பி.ஏ.பி.,), கோவை, திருப்பூர் மாவட்டத்திலுள்ள, 3.77 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.
பாசன நிலங்கள் நான்கு மண்டலங்களாக பிரித்து, சுழற்சி முறையில் நீர் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில், 4ம் மண்டல பாசனத்திற்கு, கடந்தாண்டு செப்.,20 முதல், கடந்த, ஜன., 13 வரை நீர் வழங்கப்பட்டது. இதனையடுத்து, பி.ஏ.பி., முதல் மண்டல பாசனத்துக்கு நீர் திறக்க, திட்டக்குழு சார்பில் வலியுறுத்தப்பட்டது.
கடந்த, 7ம் தேதி முதல், திட்ட தொகுப்பு அணைகளிலிருந்து, காண்டூர் கால்வாய் வழியாக, திருமூர்த்தி அணைக்கு நீர் கொண்டு வரும் பணி துவங்கியது.
இந்நிலையில், முதல் மண்டல பாசனத்துக்கு, நாளை (12ம் தேதி) முதல், மே 22ம் தேதி வரை, 100 நாட்களுக்கு, உரிய இடைவெளிவிட்டு, சுற்றுக்கள் அடிப்படையில், 5 ஆயிரம் மில்லியன் கனஅடி நீர்வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் வாயிலாக, கோவை, திருப்பூர் மாவட்டத்திலுள்ள, 94,521 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
அதே போல், பாலாறு படுகை, பழைய ஆயக்கட்டு பாசனத்திலுள்ள, தளிகால்வாய், ஏழு குளம் பாசனத்திலுள்ள, 2,786 ஏக்கர் நிலங்களுக்கு, நாளை முதல், மே31ம் தேதி வரை, நீர் திறக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது.
அணை நிலவரம்
திருமூர்த்தி அணையில் நேற்று காலை நிலவரப்படி, மொத்தமுள்ள, 60 அடியில், 52.74 அடி நீர்மட்டம் இருந்தது.
மொத்த கொள்ளள வான, 1,935 மில்லியன் கனஅடியில், 1,624 மில்லியன் கனஅடி நீர் இருப்பு இருந்தது. அணைக்கு, காண்டூர் கால்வாய் வழியாக, வினாடிக்கு, 616 கனஅடி நீரும், பாலாறு வழியாக, 6 கனஅடி என, 622 கனஅடி நீர் வரத்து இருந்தது.