/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/பி.ஏ.பி., வாய்க்கால் துார் வாரப்படுமா?பி.ஏ.பி., வாய்க்கால் துார் வாரப்படுமா?
பி.ஏ.பி., வாய்க்கால் துார் வாரப்படுமா?
பி.ஏ.பி., வாய்க்கால் துார் வாரப்படுமா?
பி.ஏ.பி., வாய்க்கால் துார் வாரப்படுமா?
ADDED : ஜன 06, 2024 11:55 PM
பொங்கலுார்:தற்பொழுது பி.ஏ.பி., ல் நான்காம் மண்டலத்திற்கு இறுதி சுற்று பாசனம் நடக்கிறது. விரைவில் முதல் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது. முதல் மண்டலத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இரண்டு ஆண்டுகளாக வாய்க்கால் சும்மா கிடப்பதால் முட்செடிகள், புதர் செடிகள் முளைத்து உள்ளது. கடந்த ஆட்சியில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் வாய்க்கால் துார்வாரப்பட்டது. ஆனால் தற்போது அதுபோன்ற எந்தத் திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. இதனால், வாய்க்காலில் திறந்து விடப்படும் தண்ணீர் கடைமடை வரை செல்வது கடுமையாக பாதிக்கப்படும்.
பாசன விவசாயிகள் கூறுகையில், 'தண்ணீர் இந்த ஆண்டு இரண்டு சுற்றுக்கும் சேர்த்து, 10 நாட்களுக்கு மட்டுமே தண்ணீர் கிடைக்கும். வாய்க்கால் ஒழுங்காக இருந்தால்தானே அந்த தண்ணீரை பாசனத்திற்கு பயன்படுத்த முடியும்.
100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களை வாய்க்கால் துார்வாரும் பணிக்கு பயன்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.