/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ 63 நாயன்மார்களுக்கு எதிர்சேவை சிறப்பு அலங்காரத்தில் பஞ்சமூர்த்திகள் 63 நாயன்மார்களுக்கு எதிர்சேவை சிறப்பு அலங்காரத்தில் பஞ்சமூர்த்திகள்
63 நாயன்மார்களுக்கு எதிர்சேவை சிறப்பு அலங்காரத்தில் பஞ்சமூர்த்திகள்
63 நாயன்மார்களுக்கு எதிர்சேவை சிறப்பு அலங்காரத்தில் பஞ்சமூர்த்திகள்
63 நாயன்மார்களுக்கு எதிர்சேவை சிறப்பு அலங்காரத்தில் பஞ்சமூர்த்திகள்
ADDED : ஜூன் 07, 2025 11:11 PM
திருப்பூர்: மலர் அலங்காரத்துடன் எழுந்தருளிய பஞ்சமூர்த்திகள், 63 நாயன்மார்களுக்கு எதிர்சேவையாற்றி, தேர் வீதிகளில் திருவீதியுலா வந்தனர்; கருடவாகனத்தில், தாயார்களுடன் நம்பெருமாள் அருள்பாலித்தார்.
திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி, ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவில், வைகாசி விசாகத் தேர்த்திருவிழா நடந்து வருகிறது. நாளையும், 10ம் தேதியும் தேரோட்டம் நடைபெறுகிறது. விழாவில், ஐந்தாம் நாளான நேற்று, பஞ்சமூர்த்தி புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது.
மூஷிக வாகனத்தில் விநாயகப் பெருமான், ரிஷப வாகனத்தில் சோமாஸ்கந்தர், காமதேனு வாகனத்தில் விசாலாட்சியம்மன், மயில் வாகனத்தில் வள்ளி தெய்வானை சமேத செல்வ முத்துக்குமார சுவாமி, வெள்ளி ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகள் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளினர்.
கொங்கு குலாலர் உடையார் அறக்கட்டளையினர் முன்னிலையில், பரிவட்டம் கட்டும் நிகழ்ச்சி நடந்தது; பஞ்சமூர்த்திகள், கோவில் வளாகத்தில் எழுந்தருளி, 63 நாயன்மார்களுக்கு எதிர்சேவை காட்சியளித்தனர்.
சிவனடியார்களின் சிவகைலாய வாத்திய இசை, நறுமணம் பரப்பிய சாம்பிராணி என, தேர்வீதிகளில் திருவீதியுலா சென்ற போது, பக்தி மணம் கமழ்ந்தது.
இன்று, திருக்கல்யாண உற்சவம், வெள்ளையானை, அம்மன் பல்லக்கு சேவையும், நம்பெருமாளுக்கு அனுமன் வாகன சேவையும் நடைபெற உள்ளது.
ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவில் வளாகத்தில், சாய் கிருஷ்ணா ஸ்கூல் ஆப் பைன் ஆர்ட்ஸ் மாணவியரின், நாட்டிய கலை நிகழ்ச்சி நடந்தது. இன்று மாலை, வீரமணி ராஜூ, அபிேஷக் ராஜூவின், பக்தி பாடல் நிகழ்ச்சி நடக்க உள்ளது.