/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பல்லாங்குழி சாலை... இருள்சூழ் வீதி... ஆபத்தான கால்வாய் பல்லாங்குழி சாலை... இருள்சூழ் வீதி... ஆபத்தான கால்வாய்
பல்லாங்குழி சாலை... இருள்சூழ் வீதி... ஆபத்தான கால்வாய்
பல்லாங்குழி சாலை... இருள்சூழ் வீதி... ஆபத்தான கால்வாய்
பல்லாங்குழி சாலை... இருள்சூழ் வீதி... ஆபத்தான கால்வாய்

துார்வாராத நல்லாறு
வெங்கமேடு - பெரியாயிபாளையம் சாலையில், நல்லாறு ஓடை அருகே, பொதுக்கழிப்பிடத்துக்கு பின்புறம் மயானம் பராமரிப்பு இல்லாமல், முட்புதர் மண்டி காணப்படுகிறது.
விபத்து அபாயம்
அங்கேரிபாளையம் துவங்கி வெங்கமேடு, பெரியாயிபாளையம் சாலையில் அதிகளவில் வாகனங்கள் பயணிக்கின்றன. ஆனால், ஆக்கிரமிப்பால் பல இடங்களில் சாலை குறுகலாகவே உள்ளது. பல்லாங்குழி சாலையில், வாகனங்கள் வேகமாக பயணிப்பதால், விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.
நாய்கள் 'படை'
நல்லாறு, அதன் இணைப்பாக உள்ள சிறிய ஓடைகளில் இறைச்சி கழிவுகள் திறந்த வெளியில் கொட்டப்படுகிறது. இவற்றை தின்ன பல்வேறு இடங்களில் இருந்து படையெடுக்கும் நாய்களால், வீதியெங்கும் இவை சுற்றித்திரிகின்றன. இதனால், மக்களிடையே அச்சம் நிலவுகிறது.
பூங்கா பரிதாபம்
ஆர்.ஜி.எஸ்., நகரில் மாநகராட்சி பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது. தண்ணீர் இல்லாததால், செயற்கை நீரூற்று கழற்றி 'ஓரம்' கட்டப்பட்டுள்ளது. முற்றிலும் செடிகள் முளைத்துள்ளன. குழந்தைகள் விளையாடும் துாரி, விளையாட்டு உபகரணங்கள் சேதமாகியுள்ளன; சீர்செய்வது அவசியம்.
தேவை தடுப்பு
அங்கேரிபாளையம் - செட்டிபாளையம், விரிவான சாக்கடை கால்வாய் வசதியில்லை. மண் கால்வாயாக உள்ளது; கழிவுநீர் தேங்கியிருக்கிறது. கால்வாய்கள் ஆழமாக உள்ளன; தடுப்புச்சுவர், வேலி இல்லை. வாகன ஓட்டிகள் வளைவில் திரும்பும்போது விழுந்து விடும் அபாயம் உள்ளது.
விளக்கு இல்லை
எஸ்.டி.வி., நகர், ஏ.எஸ்.எம்.ஆர்., கார்டன், தங்கம்மன் நகர் மின் வாரிய அலுவலகம் செல்லும் வழி, வேணு அவென்யூ, சீனிவாசா லே-அவுட், சன்பிளவர் கார்டன், மாதேஸ்வரன் கோவில் வீதி உள்ளிட்ட இடங்களில், 2018ல் மின்கம்பங்கள் நடப்பட்டன. 165 கம்பங்களில் மட்டும் தெருவிளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.