Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பரிதாப நிலையில் காணப்படும் பல்லடம் வேளாண் கட்டடம்

பரிதாப நிலையில் காணப்படும் பல்லடம் வேளாண் கட்டடம்

பரிதாப நிலையில் காணப்படும் பல்லடம் வேளாண் கட்டடம்

பரிதாப நிலையில் காணப்படும் பல்லடம் வேளாண் கட்டடம்

ADDED : மே 22, 2025 03:53 AM


Google News
Latest Tamil News
பல்லடம்; பல்லடத்தில், தென்னை, வாழை, சோளம், மக்காச்சோளம் மற்றும் காய்கறிப் பயிர்கள் என, விவசாயத் தொழில் பரவலாக நடந்து வருகிறது.

வேளாண்மை தொடர்பான அனைத்து பணிகளுக்காகவும், விவசாயிகள் வந்து செல்லும் பிரதான அலுவலகமான பல்லடம் வேளாண் அலுவலகம், மிகவும் பரிதாபத்துக்குரிய நிலையில் உள்ளது. கட்டடம் பழுதாகி பல ஆண்டுகள் ஆகின்றன.

ஏற்கனவே, இதன் முதல் தளத்தில் செயல்பட்டு வந்த மண் பரிசோதனை மைய கட்டடத்தின் மேற்கூரைகள் பெயர்ந்து விழுந்ததன் காரணமாக, மண் பரிசோதனை மையம் பொங்கலூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்தும், வேளாண் அலுவலக கட்டடம் பராமரிக்கப்படுவதாக தெரியவில்லை. கட்டடத்தின் பல இடங்களில், சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து, அபாயகரமாக மாறிவருகிறது. அதிகாரிகள், அலுவலர்களுக்கு மட்டுமின்றி, பல்வேறு தேவைகளுக்காக வந்து செல்லும் விவசாயிகளுக்கும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது.

பருவமழை துவங்க உள்ள நிலையில், கட்டடத்தின் ஸ்திரத்தன்மை மிகவும் கேள்விக்குறியாகவே உள்ளது. எனவே, மோசமான நிலையில் உள்ள வேளாண் அலுவலக கட்டடத்தின் ஸ்திரத்தன்மையை ஆராய்ந்து, கட்டடத்தை புதுப்பிக்கவோ அல்லது இடித்து விட்டு புதிய கட்டடம் கட்டவோ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us