/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பழனிசாமி பிரசார கூட்டம் வீடுவீடாக அழைப்பு பழனிசாமி பிரசார கூட்டம் வீடுவீடாக அழைப்பு
பழனிசாமி பிரசார கூட்டம் வீடுவீடாக அழைப்பு
பழனிசாமி பிரசார கூட்டம் வீடுவீடாக அழைப்பு
பழனிசாமி பிரசார கூட்டம் வீடுவீடாக அழைப்பு
ADDED : செப் 09, 2025 11:18 PM

திருப்பூர்; அ.தி.மு.க., பிரசார கூட்டத்துக்காக, திருப்பூர் தெற்கு தொகுதியில், வீடு வீடாக சென்று, அழைப்புவிடுத்து வருகின்றனர்.
அ.தி.மு.க., பொதுசெயலாளர் பழனிசாமி, வரும் 12ம் தேதி, திருப்பூர் வடக்கு மற்றும் திருப்பூர் தெற்கு தொகுதிகளில், பிரசார சுற்றுப்பயணம் வருகிறார். மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாப் மற்றும் மாநகராட்சி அலுவலகம் அருகே பேசுகிறார். இந்நிலையில், ஒவ்வொரு தொகுதியில் இருந்தும், 50 ஆயிரம் பேரை அழைத்துவர கட்சியினர் திட்டமிட்டுள்ளனர்.
அதற்கான, கட்சி நிர்வாகிகள், பூத் நிர்வாகிகளுடன் சென்று, வீடு வீடாக அழைப்பு விடுத்து வருகின்றனர். பிரத்யேகமாக அச்சிடப்பட்ட துண்டு பிரசுரத்தை நேரில் சென்று வழங்கி, குடும்பத்துடன் வந்து பங்கேற்க வேண்டுமென அழைப்பு விடுத்து வருகின்றனர்.