ADDED : செப் 19, 2025 08:13 PM
உடுமலை; உடுமலை அரசு மருத்துவமனையில், அவுட் போலீஸ் ஸ்டேஷன் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உடுமலை வ.உ.சி., வீதியில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு உடுமலை மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வருகின்றனர். விபத்து, அடிதடி சம்பந்தமாகவும் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு சிகிச்சைக்கு வருகின்றனர். எனவே, இங்கு அவுட் போலீஸ் ஸ்டேஷன் அமைக்கவும், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.