/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/காக்கும் எம் காவலனே காண்பரிய பேரொளியே!காக்கும் எம் காவலனே காண்பரிய பேரொளியே!
காக்கும் எம் காவலனே காண்பரிய பேரொளியே!
காக்கும் எம் காவலனே காண்பரிய பேரொளியே!
காக்கும் எம் காவலனே காண்பரிய பேரொளியே!
ADDED : ஜன 31, 2024 12:36 AM
ஈசனின் இடப்பாகம் உறையும் பார்வதிதேவி, ஆயிரம் ஆண்டுகள் அவிநாசித் தலத்தில் இருந்து, சிவபூஜை செய்து வலப்பாகம் பெற்ற வரலாறு, அவிநாசி திருத்தலத்துக்கு உண்டு. பிரம்மன் உள்ளிட்ட தேவாதிதேவர்கள், அரசுரர், வேடர்கள் என, அடியார் பலருக்கும் அருட்கடாட்ஷம் வழங்கியிருக்கிறார், அவிநாசி ஆளுடையாளர்.
கருணாகர செல்வியாகிய கருணாம்பிகை அம்மன் சன்னதியின் கோஷ்டத்தில், துர்காதேவி சிலை அருகே, சுவற்றில் தேளின் உருவமும் உள்ளது. தேளுக்கு பொட்டு வைத்து வழிபட்டால், விஷ ஜந்துக்களால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும் என்று, ஆண்டாண்டு காலமாக பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.
தேளை வழிபட செல்லும் பக்தர்கள், ராஜகோபுரம் முன் உள்ள செல்வவிநாயகரிடம் அனுமதி பெற வேண்டும் என்ற வழக்கமும் இங்குள்ளது. அவிநாசி திருத்தலத்தில், காசி பைரவருக்கு முற்பட்ட பைரவர் அருளாட்சி நடத்தி வருகிறார்.
மூலாலய உட்பிரகாரத்திலேயே, அம்மையப்பருக்கு அடுத்தபடியாக சக்தி பெற்றவராக காட்சியளிக்கிறார். இங்குள்ள தட்சிணாமூர்த்தியும், ஞானத்தின் உருவாக அருள்பாலிக்கிறார். கோவில் வளாகத்தின் வடகிழக்கில், கனகசபை மண்டபம் அருகே, நவக்கிரஹமும், சனிபகவானின் தனி சன்னதியும் உள்ளது.
சங்கடம் நீக்கும் சனிபகவான்
நவக்கிரஹங்களில் மந்தமானவராகிய சனிபகவானை கண்டு அஞ்சாதவர் இல்லை. அவருடைய ஆளுமையின் போது, துன்பங்கள் நீங்கி நிம்மதி வேண்டுமென சிவபெருமானை, பக்தர்கள் சரணடைவது வழக்கம். அந்த வகையில், தசரதனின் ஆட்சியின் போது, குலகுருவாக இருந்த வசிஷ்டருக்கும், ஏழரை சனியின் தாக்கம் ஏற்பட்டது.
தசரதன் சனிபகவான் மீது கீர்த்தனைகள் பாடி, வரங்கள் பெற்றவர். அதன்படியாக, திருப்புக்கொளியூர் திருத்தலத்தில் இருக்கும் சனிபகவானை வணங்கிய பிறகே, வசிஷ்டரின் சனி தோஷம் நீங்கியது என்று தலபுராணம் கூறுகிறது. இங்குதான், ஆதிகாலத்தில் இருந்தே சனிபகவான் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார்.
இடது கால் பீடத்தின் மீது வைத்தபடியும், வலது காலை காகத்தின் மீது வைத்தபடியும் காட்சியளிக்கிறார். வலது கையில் அம்பு மற்றும் சூலமும், இடது கையில் அபய முத்திரையும், வில்லுடன் அருள்பாலிக்கிறார்.
காகத்தின் மீது மகிழ்ச்சியுடன் சாய்ந்து நின்று அருள்பாலிப்பதால், இங்குள்ள அனுக்கிரக மூர்த்தியை வணங்கினால், சனி தோஷத்தால் சங்கடங்களை அனுபவித்து வருபவர்களின் சங்கடங்கள் நீங்கி, சந்தோஷம் பெருகும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
அவிநாசி தலத்தில் அவிநாசிலிங்கேஸ்வரர் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். ஈசனின் வலம்பாகம் பெற்ற பார்வதிதேவி, பெருங்கருணை நாயகியாக, ஆட்சி அதிகாரத்துடன் அருளாட்சி நடத்தி வருகிறாள். ஆயிரம் ஆண்டுகள் தவம் இயற்றியை தலம் என்பதால், பாதிரியம்மன் என்ற பெயரில் தவக்கோலத்தில் அருள்புரிகிறாள்.
மாசற்றசோதி மலர்ந்த மலர்ச்சுடரே தேசனே தேனார் அமுதே சிவபுரனேபாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனேநேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சங் கெடப்பேராது நின்ற பெருங்கருணை பேராறே... என்று, திருநாவுக்கரசர் அரு ளியபடி, எல்லாம் வல்ல அவிநாசி ஆளுடையாரை கைதொழுவோம். எல்லா வளமும் பெறுவோம்...!