/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/'விவிபேட்' இயந்திரத்துக்கு விழிப்புணர்வு மாதிரி ஓட்டுப்பதிவு ஏற்பாடு'விவிபேட்' இயந்திரத்துக்கு விழிப்புணர்வு மாதிரி ஓட்டுப்பதிவு ஏற்பாடு
'விவிபேட்' இயந்திரத்துக்கு விழிப்புணர்வு மாதிரி ஓட்டுப்பதிவு ஏற்பாடு
'விவிபேட்' இயந்திரத்துக்கு விழிப்புணர்வு மாதிரி ஓட்டுப்பதிவு ஏற்பாடு
'விவிபேட்' இயந்திரத்துக்கு விழிப்புணர்வு மாதிரி ஓட்டுப்பதிவு ஏற்பாடு
ADDED : ஜன 06, 2024 12:09 AM

உடுமலை:உடுமலை தாலுகா அலுவலகம் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில், 'விவிபேட்' இயந்திர செயல்பாடு குறித்து, தேர்தல் பிரிவு அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்திய தேர்தல் ஆணையம் ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், பதிவை வாக்காளர்களே சரிபார்த்து கொள்ள உதவும், 'விவிபேட்' இயந்திரத்தை சில ஆண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்தியது.
கடந்த சில தேர்தல்களில், மாதிரி ஓட்டுச்சாவடிகளில் இந்த இயந்திரத்தை பொருத்தி, வாக்காளர்களுக்கு செயல்பாடுகள் குறித்து விளக்கமளித்தனர். இந்த இயந்திரத்தின் செயல்பாடு குறித்து, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில், தற்போது தேர்தல் பிரிவு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
அவ்வகையில், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், உடுமலை தாலுகா அலுவலகம் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில், 'விவிபேட்' குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
மாதிரி ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், மக்களை ஓட்டளிக்கச்செய்து, அந்த பதிவை, 'விவிபேட்' இயந்திரத்தில் பார்வையிட செய்கின்றனர்.
இதன் வாயிலாக, அந்த இயந்திரத்தின் செயல்பாடுகள் குறித்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுகிறது.
தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், 'ஓட்டுப்பதிவு இயந்திரம் மற்றும் விவிபேட் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் செயல்படும் முறை விளக்க மையம் தற்காலிகமாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அரசு அலுவலகங்களுக்கு வரும் மக்கள் இந்த இயந்திரங்களில், மாதிரி ஓட்டுப்பதிவு செய்து, அந்த பதிவை 'விவிபேட்'ல், சரிபார்த்து கொள்ளலாம். இன்னும் சில வாரங்களுக்கு இந்த தற்காலிக மையம் செயல்படும் வகையில், பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்,' என்றனர்.