Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ 'உண்மையான பக்தியால் இறைவனை உணரலாம்'

'உண்மையான பக்தியால் இறைவனை உணரலாம்'

'உண்மையான பக்தியால் இறைவனை உணரலாம்'

'உண்மையான பக்தியால் இறைவனை உணரலாம்'

ADDED : ஜூன் 09, 2025 12:39 AM


Google News
Latest Tamil News
திருப்பூர்; ''உண்மையான பக்தி இருந்தால், மனதால் இறைவனை உணரலாம்,'' என, கோவை ஸ்ரீராம் கனகபாடிகள் பேசினார்.

திருப்பூர், ஓடக்காடு, ராமகிருஷ்ண பஜனை மடத்தில், காஞ்சி மகா பெரியவர் ஜெயந்தி விழா நேற்று நடந்தது. கோவை ஸ்ரீராம் கனகபாடிகளின், 'ஸ்ரீமகா பெரியவாளும் ஆஸ்தீக தர்மமும்' என்ற ஆன்மிக சொற்பொழிவு நடந்தது.

அவர் பேசியதாவது:

கலியுகத்தில் கடவுள் எப்போதும் நேரில் வரமாட்டார். உண்மையான பக்தியுடன் இறைவனை வேண்டினால், ஏதாவது மனித ரூபத்தில் வந்துஉதவிகளை செய்வார். கஷ்டமான சூழலில் யாரும் மனம் நொந்துவிடக்கூடாது; இறைவனை கெட்டியாக பிடித்துக்கொள்ள வேண்டும்.

பண உதவி மட்டுமல்ல; நம் மனம் நிம்மதி அடையும் வகையில் யாராவது பேசுவதும் இறைவனின் செயல் தான். நல்லவர்களுடன் இணக்கமாக இருந்து வந்தால், நேர்மறையான வாய்ப்புகளும், வாழ்க்கையும் கிடைக்கும். இதுபோன்ற இறை நுணுக்கங்களை கற்றுணர்ந்து தான், மகா பெரியவர் உலக மக்கள் நலனுக்காக, வாழ்நாள் முழுவதும் தவம் இயற்றி வாழ்ந்தார். உலக மக்கள் நலனுக்காகவே, சான்றோர்கள் வாழ்கின்றனர்.

இவ்வாறு, அவர் பேசினார்.

மகாபெரியவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, சேலத்தில் இருந்து, மகா பெரியவர் பயன்படுத்திய பாதுகையும், பக்தர்கள் தரிசனத்துக்காக வந்திருந்தது. பக்தர்கள், பக்தி சிரத்தையுடன், பாதுகையை தரிசனம் செய்து வழிபட்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us