Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ஓணம்... திருவோணம்... மகிழ்ச்சி தித்திக்கோணும்

ஓணம்... திருவோணம்... மகிழ்ச்சி தித்திக்கோணும்

ஓணம்... திருவோணம்... மகிழ்ச்சி தித்திக்கோணும்

ஓணம்... திருவோணம்... மகிழ்ச்சி தித்திக்கோணும்

ADDED : செப் 04, 2025 11:54 PM


Google News
Latest Tamil News
இ ன்று ஓணம் திருநாள் கொண்டா டப்படுகிறது. இதையொட்டி, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லுாரிகளில் ஓணம் விழா களைகட்டியது. அதுகுறித்த தொகுப்பு:

விகாஸ் வித்யாலயா விகாஸ் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி கூலிபாளையம் பள்ளி வளாகத்தில் மகாபலி அரசரை வரவேற்கும் விதமாக ஓணம் திருநாள் கொண்டாடப்பட்டது. மாணவ, மாணவியர் கேரள பாரம்பரிய உடை அணிந்திருந்தனர். தாளாளர் ஆண்டவர் ராமசாமி, பொருளாளர் ராதா ராமசாமி, செயலாளர் ராமசாமி மாதேஸ்வரன், துணைச்செயலாளர் சிவப்பிரியா மாதேஸ்வரன், முதல்வர் அனிதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கிட்ஸ் கிளப் சி.பி.எஸ்.இ., பள்ளி திருப்பூர், புண்ணியவதி சாலையில் உள்ள கிட்ஸ் கிளப் சி.பி.எஸ்.இ., முதுநிலைப்பள்ளியில் ஓணம் திருவிழா கொண்டாடப்பட்டது. மகாபலியை வரவேற்கும் சம்பிரதாயத்துடன் துவங்கிய விழாவில், மாணவ மாணவியரின் கதகளி மற்றும் மோகினி ஆட்டம் அரங்கேறின. அத்தப்பூ கோலப்போட்டியும் நடந்தது. மூத்த முதல்வர் நிவேதிகா வெற்றி பெற்றோருக்குப் பரிசுகளை வழங்கினார்; ஓணம் குறித்தும் கருத்துகளைப் பகிர்ந்தார்.

ஏ.வி.பி., கல்லுாரி திருமுருகன்பூண்டியில் உள்ள ஏ.வி.பி., கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் ஓணம் விழா கொண்டாடப்பட்டது. ஏ.வி.பி., கல்விக்குழுமங்களின் தலைவர் கார்த்திகேயன், செயலாளர் லதா கார்த்திகேயன், முதல்வர் கதிரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவர்கள், பேராசிரியர்கள் கேரளாவின் பாரம்பரிய உடையணிந்து ஓணம் கொண்டாடினர். மகாபலி சக்கரவர்த்தியை செண்டை மேளம் முழங்க வரவேற்றனர். அத்தப்பூ கோலம் வரைந்து 'திருவாதிரைகளி' நடனமாடினர். அத்தப்பூ கோலப்போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பைன் ஆர்ட்ஸ் ஒருங்கிணைப்பாளர்கள் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

முருகு பள்ளி முருகு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், ஓணம் பண்டிகை தாளாளர் பசுபதி, முதல்வர் சசிகலா பசுபதி ஆகியோர் முன்னிலையில் கொண்டாடப்பட்டது. வாமனன் மற்றும் மகாபலி சக்ரவர்த்தியின் வருகையை வரவேற்க அத்தப்பூ கோலமிடப்பட்டது. மாணவ, மாணவியர் மத்தியில் ஓணம் சிறப்பு குறித்து தாளாளர் எடுத்துக்கூறினார்.

ஸ்ரீஷிவ் வித்யா மந்திர் ஸ்ரீஷிவ் வித்யா மந்திர் பள்ளியில் ஆசிரியர் தினத்துடன் ஓணம் கொண்டாட்டமும் நடந்தது. மாணவர்கள், ஆசிரியர்களுக்குப் போட்டிகள் நடந்தன. பூக்கோலப் போட்டியில் தங்கள் திறன்களைக் காட்டினர்.

பிரைட் பப்ளிக் பள்ளி காங்கயம் சாலை, விஜயாபுரம் பிரிவில் உள்ள பிரைட் பப்ளிக் பள்ளியில், ஆசிரியர் தினம், ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மாணவர் கலைநிகழ்ச்சிகள், விளையாட்டுப்போட்டிகள் நடந்தன. கே.ஜி., மழலையர், வாமனர் வேடமணிந்து, கலைநிகழ்ச்சிகள் மூலம் மனதை கவர்ந்தனர். ஆசிரியர், மாணவ, மாணவியர் அத்தப் பூக்கோலமிட்டனர். பள்ளி முதல்வர் மஹாலட்சுமி மற்றும் ஆசிரியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

ஸ்மார்ட் மாடர்ன் பள்ளி ஸ்மார்ட் மாடர்ன் பள்ளியில் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது. அனைத்து ஆசிரியர்களையும் நிர்வாகத்தினர் வாழ்த்தினர். பரிசு மற்றும் இரவுச் சிற்றுண்டி வழங்கி கவுரவித்தனர். ஓணம் திருவிழா கொண்டாடப்பட்டது. வாமனர் அவதாரத்தில் மகாபலியை வதம் செய்த நிகழ்ச்சியை நாட்டியம், பேச்சின் மூலம் விளக்கினர்.

அத்வைதா பள்ளி திருப்பூர், அத்வைதா இன்டர்நேஷனல் பள்ளியில் ஓணம் திருவிழா களைகட்டியது. அத்தப்பூ கோலமிட்டனர். ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகத்தினர், மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

ஜெய் சாரதா பள்ளி திருப்பூர், 15 வேலம்பாளையத்தில் உள்ள ஜெய் சாரதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஓணம் கொண்டாடப்பட்டது. பள்ளி மழலையர் பிரிவு மாணவ, மாணவியர் கேரள பாரம்பரிய உடையுடன் மகாபலி சக்கரவர்த்தி வேடமணிந்து ஓணம் விழா கொண்டாடினர். தாளாளர் நிக்கான்ஸ் வேலுசாமி, செயலாளர் கீர்த்திகா வாணி சதீஷ், பொருளாளர் சுருதி ஹரீஷ், முதல்வர் மணிமலர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

வித்யா மந்திர் பள்ளி திருப்பூர், அவிநாசி சாலை, வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஓணம் விழா கொண்டாடப்பட்டது. சிறப்புவிருந்தினராக தேசிய சிந்தனைக்கழக மாநில பொதுச்செயலர் முரளிதரன் பங்கேற்றார். பள்ளி நிறுவனர்விட்டல்ராஜன் தலைமைதாங்கினார்.

கே.ஜி., சிறுவர்aகள் மகாபலி, வாமனன் வேடமிட்டு வந்தனர். மலர் கோலங்கள் அழகுடன் திகழ்ந்தன. கே.ஜி., சிறுவர், சிறுமியர் மற்றும் ஆசிரியர்கள் கேரள மக்கள் போன்று உடை அணிந்து நடனமாடினர். தாளாளர் ஜெயந்திமாலா சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கினார்.

திறன் வளர் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முதல்வர் புஷ்பலதா, துணை முதல்வர் சித்ராதேவி பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us