/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ எண்ணெய் வித்து சாகுபடி; மீட்க தேவை மானிய திட்டம் எண்ணெய் வித்து சாகுபடி; மீட்க தேவை மானிய திட்டம்
எண்ணெய் வித்து சாகுபடி; மீட்க தேவை மானிய திட்டம்
எண்ணெய் வித்து சாகுபடி; மீட்க தேவை மானிய திட்டம்
எண்ணெய் வித்து சாகுபடி; மீட்க தேவை மானிய திட்டம்
ADDED : ஜூன் 20, 2025 11:40 PM
உடுமலை : உடுமலை கணபதிபாளையம், ராகல்பாவி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், முக்கிய எண்ணெய் வித்து பயிரான சூரியகாந்தி பரவலாக சாகுபடி செய்யப்பட்டு வந்தது.
பல்வேறு காரணங்களால், இச்சாகுபடி முற்றிலுமாக இப்பகுதியில் குறைந்து விட்டது.
விவசாயிகள் கூறியதாவது: சூரிய காந்தி சாகுபடியில், அயல் மகரந்த சேர்க்கை குறைபாடு காரணமாக விளைச்சல் பாதித்தது. இப்பிரச்னையால், விதைகள் பிடிக்காமல், பதரமாக மாறி விடும். மேலும், அறுவடை சீசனில் விலை கிடைப்பதில்லை.
ஏக்கருக்கு குறைந்தபட்சம், 20 ஆயிரம் ரூபாய் வரை செலவிட்டால், 700 கிலோ வரைக்கும் மகசூல் கிடைத்தது. சூரியகாந்தி உள்ளிட்ட எண்ணெய் வித்து பயிர் சாகுபடி பரப்பை அதிகரிக்க நேரடி கொள்முதல், மானியத்தில் விதை வழங்குதல் உள்ளிட்ட திட்டங்களை, வேளாண்துறை வாயிலாக அரசு செயல்படுத்த வேண்டும். இவ்வாறு, தெரிவித்தனர்.