/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பெற்ற தாயை கவனிக்காத மகன்கள் சொத்தை மீட்டு வழங்கிய அதிகாரிகள் பெற்ற தாயை கவனிக்காத மகன்கள் சொத்தை மீட்டு வழங்கிய அதிகாரிகள்
பெற்ற தாயை கவனிக்காத மகன்கள் சொத்தை மீட்டு வழங்கிய அதிகாரிகள்
பெற்ற தாயை கவனிக்காத மகன்கள் சொத்தை மீட்டு வழங்கிய அதிகாரிகள்
பெற்ற தாயை கவனிக்காத மகன்கள் சொத்தை மீட்டு வழங்கிய அதிகாரிகள்
ADDED : மே 22, 2025 12:13 AM

உடுமலை, ; உடுமலை அருகே, தான செட்டில்மென்ட் பெற்ற மகன்கள், தாயை கவனிக்காததால், நீதிமன்ற உத்தரவு அடிப்படையில், சொத்து திரும்ப ஒப்படைக்கப்பட்டது.
உடுமலை தாலுகா, பெதப்பம்பட்டி அருகேயுள்ள தொட்டம்பட்டி, கிழக்கு தோட்டத்தை சேர்ந்த கருப்புச்சாமி மனைவி, காளியம்மாள், 60. தனது மகன்களுக்கு, தொட்டம்பட்டி மற்றும் பண்ணைக்கிணறு கிராமத்திலிருந்த, 10.99 ஏக்கர் விவசாய நிலத்தை, கோமங்கலம் சார்பதிவாளர் அலுவலகத்தில், தான செட்டில்மென்ட் வாயிலாக வழங்கியுள்ளார்.
நிலத்தை தான செட்டில்மன்ட் பெற்ற பின், மகன்கள் இருவரும் தாயை கவனிக்கவில்லை. இது குறித்து, காளியம்மாள், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
பெற்றோர் மற்றும் முதியோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், மேற்படி தான செட்டில்மன்ட் ஆவணங்களை ரத்து செய்து, தானம் வழங்கப்பட்ட சொத்துக்களை காளியம்மாளுக்கு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன் அடிப்படையில், நேற்று உடுமலை கோட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள், காளியம்மாள், தனது இரு மகன்களுக்கு வழங்கிய, இரு நிலங்களை மீட்டு, காளியம்மாள் வசம் ஒப்படைத்தனர்.