/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/குப்பை கிடங்கான குட்டை ;கண்டுகொள்ளாத அதிகாரிகள்குப்பை கிடங்கான குட்டை ;கண்டுகொள்ளாத அதிகாரிகள்
குப்பை கிடங்கான குட்டை ;கண்டுகொள்ளாத அதிகாரிகள்
குப்பை கிடங்கான குட்டை ;கண்டுகொள்ளாத அதிகாரிகள்
குப்பை கிடங்கான குட்டை ;கண்டுகொள்ளாத அதிகாரிகள்
ADDED : ஜன 28, 2024 08:49 PM
உடுமலை;உடுமலை அருகே, ஆக்கிரமிப்புகளால் சித்தக்குட்டை சுருங்கிய நிலையில், குப்பை கிடங்காக மாற்றப்பட்டுள்ளது.
உடுமலை, தாராபுரம் ரோட்டில் சித்தக்குட்டை உள்ளது. 10 ஏக்கருக்கு மேல் அமைந்துள்ள இந்த குட்டைக்கு, நகரின் மேற்கு மற்றும் வடக்கு பகுதி கிராமங்களில் பெய்யும் மழை நீர் வரத்தாக உள்ளது. இங்கு தேங்கும் தண்ணீர் சுற்றுப்புறத்திலுள்ள நுாற்றுக்கணக்கான விவசாய நிலங்களுக்கு நிலத்தடி நீர் ஆதாரமாகவும் இருந்தது.
இதன் ஒரு பகுதி கல் குவாரி குழியாகவும் உள்ளதால், ஆண்டு முழுவதும் நீர் இருப்பு காணப்படும். ஆனால், இக்குட்டையின் நீர் வழித்தடங்கள் ஆக்கிரமிப்பு காரணமாக, கடந்த சில ஆண்டுகளாக மழை பெய்தாலும், குட்டைக்கு நீர் வருவதில்லை.
இதனால், ஊராட்சி குப்பை, தொழிற்சாலை கழிவுகள், இக்குட்டையில் கொட்டப்பட்டு, குப்பை கிடங்காக மாற்றப்பட்டுள்ளது. சுகாதார கேடும், குப்பைக்கு தீ வைப்பதால், சுற்றுசூழல் மாசும் ஏற்படுகிறது.
எனவே, குட்டையின் நீர் வழித்தடத்திலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, மழை காலத்தில் நீர் தேங்க வழி செய்யவும், குப்பைக்கிடங்காக குட்டை மாற்றப்படுவதை தடுக்கவும், உடுமலை ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.