ADDED : ஜூன் 07, 2025 01:02 AM
திருப்பூர்; திருப்பூர் கோட்ட கலால் தாசில்தார் ஜெய்சிங் சிவகுமார், மத்திய நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் காமராஜ், எஸ்.ஐ., உதயசந்திரன், தாராபுரம் மதுவிலக்கு எஸ்.ஐ., லோகநாதன் ஆகியோர் அடங்கிய குழு நேற்று திடீர் சோதனை மேற்கொண்டது.
திருப்பூர் அடுத்த ஊத்துக்குளி,செங்கப்பள்ளி சுற்றுப்பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில், மெத்தனால் பயன்பாடு ஏதேனும் உள்ளதா என்பது குறித்து இந்த குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
மெத்தனாலை எந்த இடத்திலும் விற்பனை செய்வது, பயன்படுத்துவது என்பது தடை செய்யப்பட்டுள்ளது. சட்டத்துக்குப் புறம்பான இது போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுவோர், கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.