Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/வராத குடிநீர்... ஒளிராத விளக்கு... வடியாத கழிவுநீர்! மண்டல கூட்டத்தில் கவுன்சிலர்கள் குமுறல்

வராத குடிநீர்... ஒளிராத விளக்கு... வடியாத கழிவுநீர்! மண்டல கூட்டத்தில் கவுன்சிலர்கள் குமுறல்

வராத குடிநீர்... ஒளிராத விளக்கு... வடியாத கழிவுநீர்! மண்டல கூட்டத்தில் கவுன்சிலர்கள் குமுறல்

வராத குடிநீர்... ஒளிராத விளக்கு... வடியாத கழிவுநீர்! மண்டல கூட்டத்தில் கவுன்சிலர்கள் குமுறல்

ADDED : பிப் 06, 2024 12:52 AM


Google News
Latest Tamil News
அனுப்பர்பாளையம்;திருப்பூர் மாநகராட்சி இரண்டாவது மண்டல கூட்டத்தில், குடிநீர், கழிவுநீர், மின்விளக்கு என பிரச்னைகளை கவுன்சிலர்கள் கொட்டித்தீர்த்தனர்.

திருப்பூர் மாநகராட்சி, இரண்டாவது மண்டல கூட்டம் தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் நடந்தது. உதவி கமிஷனர் முருகேசன் முன்னிலை வகித்தார்.

கவுன்சிலர்களின் விவாதம்:

தமிழ்ச்செல்வி (அ.தி.மு.க.,):

முதல் மண்டல பகுதியில் உள்ள கழிவுநீர் செல்ல மிகப் பெரிய சாக்கடை கால்வாய் அமைத்து, இரண்டாவது மண்டலம் 16வது வார்டு வழியாக கொண்டு செல்கின்றனர்.

வார்டில் கால்வாய் குறுகியதாக உள்ளதால், மழைக்காலங்களில் அடித்து வரப்படும் மழை நீருடன் கழிவுநீர் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து விடுகிறது.

இதனால் ஸ்ரீநகர், கவிதா நகர், வ.உ.சி., நகர், கே.ஜி., நகர் ஜெ.ஜெ., நகர், சொர்ணபுரி கார்டன் ஆகிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்படும்.

முதல் மண்டலம் அங்கேரிபாளையம் வழியாக கழிவுநீர் கொண்டு செல்ல வழி உள்ளது. எனது வார்டு வழியாக கழிவுநீர் கொண்டு செல்வதை தடுக்க வேண்டும்.

கவிதா (அ.தி.மு.க.,) : வரி போடுதல் பணி தாமதம் ஏற்படுகிறது. சப்பை தண்ணீர் குழாய்ப்பணி மந்தமாக நடக்கிறது.

தலைவர் : ஒப்பந்ததாரர்கள் பணி செய்ய தாமதம் ஏற்படுத்தினால், நடவடிக்கை எடுக்கப்படும்.

குமார்(ம.தி.மு.க.,) : புதிய தெருவிளக்குகள் அமைக்க வேண்டும். 24 மணி நேர குடிநீர் வினியோக குழாய் பதிக்கும் பணியின்போது குடிநீர் குழாயை உடைத்து விடுகின்றனர். சரி செய்வதில்லை.

இந்திராணி(அ.தி.மு.க.,) : எங்கள் வார்டில் குடிநீர் வந்து 13 நாட்கள் ஆகிறது. சப்பை தண்ணீர் வினியோகமும் இல்லை. வெயில் காலம் வந்துவிட்டது. பொதுமக்கள் ரோட்டுக்கு வந்து விடுவர். கூலி பாளையம் பாலத்தில் மின் விளக்கு சரியாக எரிவதில்லை.

வேலம்மாள்(தி.மு.க.,) : எல்லா பணியும் பல மாதங்கள் தாமதமாக நடக்கிறது. தெருவிளக்கு எரிவதில்லை.

லோகநாயகி( தி.மு.க.,) : பாதாள சாக்கடை பணியில் சில வீடுகள் விடுபட்டுள்ளது. குப்பை எடுக்க மற்றும் சாக்கடை துார்வார ஆட்கள் வருவதில்லை. கூடுதல் தெரு விளக்கு பொருத்த வேண்டும்.

தலைவர் : கூடுதல் தெருவிளக்கு வந்துள்ளது. விரைவில் பொருத்தப்படும்.

முத்துசாமி(அ.தி.மு.க.,) : கொசு மருந்து அடிக்க வேண்டும். குடிநீர்க்கசிவு அடைக்க காலதாமதம் ஏற்படுகிறது.

தலைவர் : கொசு மருந்து தினசரி அடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கோபால்சாமி(தி.மு.க., ): பாதாள சாக்கடை இணைப்பு அனைவருக்கும் முறையாக வழங்குவதில்லை.

தலைவர் : மாநகராட்சிக்கு புதிய தெரு விளக்கு வந்துள்ளது. இரண்டாம் மண்டலத்திற்கு வார்டுக்கு 200 வீதம் 3 ஆயிரம் விளக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக சோடியம் விளக்குகளை அப்புறப்படுத்தி விட்டு அதில் புதிய எல்.இ.டி., விளக்கு பொருத்தப்படும். தொடர்ந்து கவுன்சிலர்கள் கேட்டு கொண்ட புதிய இடங்களில் தெரு விளக்கு பொருத்தப்படும்.

----------

ஆர்வம் காட்டாத கவுன்சிலர்கள்

மண்டல கூட்டம் காலை 11:00 மணிக்கு நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் உதவி கமிஷனர் தாமதத்தால், 11:30 மணிக்கு தொடங்கியது.

16 வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர் தமிழ்செல்வி 11:40 மணிக்கு தாமதமாக வந்தார்.

2 -வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் மாலதி, 18 -வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் தாமோதரன், 19 -வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் லதா, 30வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர் புஷ்பலதா, ஆகிய நான்கு பேர் கூட்டத்திற்கு வரவில்லை.

...........

திருப்பூர் மாநகராட்சி இரண்டாவது மண்டல கூட்டம் நடந்தது.

வரி போடாமல் இழுத்தடிப்பு

ஆர்.ஐ.,கள் தான் பொறுப்புராஜேந்திரன் (இ.கம்யூ.,): வார்டில் வரி செலுத்த பொதுமக்கள் தயாராக உள்ளனர். அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லை. பில் கலெக்டர் வருவதில்லை. உதவியாளர் வைத்து வேலை வாங்குகிறார். வேலை செய்யாத பில் கலெக்டர் எதற்கு? வரி போட தாமதம் ஏன்? வரி போட வராத காரணத்திற்கு அதிகாரி பதில் கூற வேண்டும்.உதவி கமிஷனர் : வரி போடுவதற்கு தாமதத்திற்கு வருவாய் ஆய்வாளர்கள்தான் பொறுப்பு. கவுன்சிலர்கள் எழுத்துபூர்வமாக புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.



உண்ணாவிரதம்

த.மா.கா., முடிவுசெழியன்( த.மா.கா.,) : ரோடு பணியை தொடங்குகிறார்கள். ரோட்டை தோண்டி போட்டு விட்டு, மூன்று அல்லது நான்கு மாதம் கிடப்பில் போட்டு விடுகின்றனர். பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். ஒவ்வொரு குடும்பத்தையும் துன்புறுத்திதான் வேலை செய்யப்படுகிறது.இதற்கு ஒரு வாரத்தில் தீர்வு ஏற்படவில்லை என்றால், காந்தி சிலை முன்பு உண்ணாவிரதம் இருக்க போகிறேன். ஒப்பந்ததாரர் பணி சரியில்லை என்றால் அவரது ஒப்பந்தத்தை ரத்து செய்யுங்கள்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us