/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ஸ்ரீசாரதாம்பாள் கோவில் வளாகத்தில் 'நிப்ட்-டீ' மாணவியரின் கைவண்ணம் ஸ்ரீசாரதாம்பாள் கோவில் வளாகத்தில் 'நிப்ட்-டீ' மாணவியரின் கைவண்ணம்
ஸ்ரீசாரதாம்பாள் கோவில் வளாகத்தில் 'நிப்ட்-டீ' மாணவியரின் கைவண்ணம்
ஸ்ரீசாரதாம்பாள் கோவில் வளாகத்தில் 'நிப்ட்-டீ' மாணவியரின் கைவண்ணம்
ஸ்ரீசாரதாம்பாள் கோவில் வளாகத்தில் 'நிப்ட்-டீ' மாணவியரின் கைவண்ணம்
ADDED : செப் 24, 2025 11:53 PM

திருப்பூர்: 'நிப்ட்-டீ' கல்லுாரி மாணவியர், 'வால் தெரபி' என்ற கருத்தை அடிப்படையாக கொண்டு, ஸ்ரீசாரதாம்பாள் கோவில் சுவர்களை வண்ணமயமாக வடிவமைத்தனர்.
முதலிபாளையம் 'நிப்ட்- டீ' கல்லுாரி மாணவியர், திருப்பூரில் சமூக சேவை மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை பேணி பாதுகாக்க, தனித்துவமான முயற்சியை மேற்கொண்டுள்ளனர். செப்., 12ம் தேதி முதல், 20 வரை, 'காஸ்ட்யூம் டிசைன் அண்ட் பேஷன்' துறை மூன்றாம் ஆண்டு மாணவிகள் திவ்யா, மித்ரா, ேஹமா, எஸ்.திவ்யா, ஹரிணி ஆகியோர், 'வால் தெரபி' என்ற கருத்தை மையப்படுத்தி, கோவில் வளாகத்தில் உள்ள சுவர்களில் ஓவியம் வரைந்தனர். அவிநாசி ரோடு, சிருங்கேரி பீடத்தின் ஸ்ரீசாரதாம்பாள் கோவில் வளாக சுவர்களில், பச்சிகாரி, தொடா, வார்லி, சோரை, பித்தோரா, மதுபனி, ஐபன், கதகளி, வங்காள மக்கள் கலை போன்ற இந்திய பாரம்பரிய கலை வடிவங்களால் உயிர்பெற்றுள்ளன.
கலையை பாதுகாப்பதுடன், கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு, அமைதியையும், மகிழ்ச்சியையும் வழங்கும் சூழல் மெருகேறியுள்ளது. கல்லுாரி தலைவர் கோவிந்தராஜ், துணை தலைவர் மெஜஸ்டிக் கந்தசாமி, 'டீன்' சம்பத், மேலாண்மை ஒருங்கிணைப்பாளர் கந்தசாமி, நிர்வாக அலுவலர் மகேஷ்குமார் ஆகியோர் ஓவியங்களை பார்த்து, மாணவியரை பாராட்டினர். கோவில் அறங்காவலர் கல்யாணராமன், சுவற்றில் ஓவியம் வரைந்த மாணவியை பாராட்டி பரிசு வழங்கினார்.