/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/தேசிய இளைஞர் தின விழா; அரசு கல்லூரி மாணவர் தேர்வு தேசிய இளைஞர் தின விழா; அரசு கல்லூரி மாணவர் தேர்வு
தேசிய இளைஞர் தின விழா; அரசு கல்லூரி மாணவர் தேர்வு
தேசிய இளைஞர் தின விழா; அரசு கல்லூரி மாணவர் தேர்வு
தேசிய இளைஞர் தின விழா; அரசு கல்லூரி மாணவர் தேர்வு
ADDED : ஜன 12, 2024 10:44 PM
உடுமலை:மகாராஷ்டிரா மாநிலம், நாசிக்கில், வரும், 16ம் தேதி வரை,நடைபெறும்தேசிய இளைஞர் திருவிழாவில் திருப்பூர் அரசு கல்லுாரி மாணவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சகம் நடத்தும்,இவ்விழாவில் பங்கேற்க தமிழகம் உட்பட, பல்வேறு மாநிலங்களில் இருந்து, என்.எஸ்.எஸ்., மாணவ, மாணவியர் ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
கோவை பாரதியார் பல்கலையின் கீழ் உள்ள கல்லுாரிகளில் இருந்து, பத்து பேர் தேர்வாகியுள்ளனர்.
திருப்பூர், சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரியில் இருந்து, வரலாற்றுத்துறை மாணவர் தினேஷ்கண்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிரா பயணமாகிய மாணவரை, கல்லுாரி முதல்வர்,பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர் பாராட்டினர்.