ADDED : ஜன 11, 2024 07:13 AM

அவிநாசி : தெக்கலுார் ஊராட்சி, சென்னி மலை பாளையம் பகுதியைச் சேர்ந்த செல்வம் மகன் ராதேஷ், 17. அவிநாசி அருகே உள்ள அவிநாசி கல்வி நிலையம் மெட்ரிக் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் பள்ளியின் மூலம் தேர்வு செய்யப்பட்டு, இந்திய விளையாட்டு கூட்டமைப்பு சார்பில், கடந்த மாதம் 19ம் தேதி டில்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான, 14 வயது முதல் 17 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான கராத்தே போட்டியில் கலந்து கொண்டார். இதில், முதல் இடத்தைப் பெற்று பதக்கம் வென்றார். மாணவருக்கு கவுண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ., அருண்குமார், சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.