/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ நல்லுார் ஈஸ்வரன் கோவில் தேர்த்திருவிழா; திருவீதியுலா செல்லும் வாகனங்கள் வந்தாச்சு நல்லுார் ஈஸ்வரன் கோவில் தேர்த்திருவிழா; திருவீதியுலா செல்லும் வாகனங்கள் வந்தாச்சு
நல்லுார் ஈஸ்வரன் கோவில் தேர்த்திருவிழா; திருவீதியுலா செல்லும் வாகனங்கள் வந்தாச்சு
நல்லுார் ஈஸ்வரன் கோவில் தேர்த்திருவிழா; திருவீதியுலா செல்லும் வாகனங்கள் வந்தாச்சு
நல்லுார் ஈஸ்வரன் கோவில் தேர்த்திருவிழா; திருவீதியுலா செல்லும் வாகனங்கள் வந்தாச்சு

முதன்முறையாகதேர்த்திருவிழா
விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், முதன்முறையாக ஆனி மாத தேர்த்திருவிழா, 4ம் தேதி, கொடியேற்றத்துடன் தேர்த்திருவிழா நடக்கிறது. தினமும், காலை, 10:00 மணிக்கு, சோமாஸ்கந்தர் மற்றும் விசாலாட்சியம்மன் மகா அபிேஷகம் மற்றும் அலங்காரபூஜைகள் நடக்க உள்ளது. வரும், 10ம் தேதி அதிகாலை, 3:00 மணிக்கு மஹா அபிேஷகத்தை தொடர்ந்து, காலை, 6:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்துடன் விநாயகர் மற்றும் சோமாஸ்கந்தர் திருத்தேர்களில் இருந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளனர். அன்று மாலை, தேர்வடம் பிடித்து, தேரோட்டம் நடக்க உள்ளது.
வாகனங்கள்வந்தாச்சு
தேர்த்திருவிழாவில், கொடியேற்றம் துவங்கி தேர்த்திருவிழா வரை, உற்சவமூர்த்திகள் திருவீதியுலா செல்ல வாகனங்கள் கோவிலை வந்தடைந்துள்ளன. கொடியேற்றம் நாளில் கற்பக விருட்ச வாகனம், 5ம் தேதி சூரியபிரபை, 6ம் தேதி ராவணேஸ்வரன், 7ம் தேதி அதிகாரநந்தி, 8ம் தேதி பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடக்கிறது.