/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பிளஸ் 2 தேர்ச்சியில் முருகு பள்ளி கலக்கல் பிளஸ் 2 தேர்ச்சியில் முருகு பள்ளி கலக்கல்
பிளஸ் 2 தேர்ச்சியில் முருகு பள்ளி கலக்கல்
பிளஸ் 2 தேர்ச்சியில் முருகு பள்ளி கலக்கல்
பிளஸ் 2 தேர்ச்சியில் முருகு பள்ளி கலக்கல்
ADDED : மே 12, 2025 03:47 AM

திருப்பூர்; திருப்பூர், பி.என்., ரோடு, குளத்துப்பாளையம் பிரிவு, அண்ணா நகரில் உள்ள முருகு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவி முர்ஷிதா ஷீரின் (உயிரியல் மற்றும் கணிதம்), 588 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம், ரக் ஷனா (வணிகவியல், வணிக கணிதம் மற்றும் புள்ளியியல்) 584 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம், மிதிலேஷ் ஹரி (கணினி அறிவியல் மற்றும் கணிதம்) 578 மதிப்பெண் பெற்று, மூன்றாமிடம் பிடித்தனர்.
கணித பாடத்தில், 2 பேர், வணிக கணிதம் மற்றும் புள்ளியியல், 2, கணினி அறிவியல், 5, கணினி பயன்பாடு மற்றும் வணிகவியல் பாடங்களில் தலா ஒருவர், சென்டம் அடித்தனர்.
தேர்வு எழுதிய, 76 மாணவர்களும், முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றனர். பள்ளிக்கு பெருமை சேர்த்த அனைத்து மாணவ, மாணவியருக்கும் பள்ளி தாளாளர் பசுபதி, பள்ளி முதல்வர் சசிகலா ஆகியோர் இனிப்பு வழங்கி பாராட்டினர்.
பிளஸ் 1 அட்மிஷனுக்கு, 89039 93399 தொடர்பு கொள்ளலாம்.