/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ரேஷன் கடை இடமாற்றம் மா.கம்யூ., கட்சி எதிர்ப்பு ரேஷன் கடை இடமாற்றம் மா.கம்யூ., கட்சி எதிர்ப்பு
ரேஷன் கடை இடமாற்றம் மா.கம்யூ., கட்சி எதிர்ப்பு
ரேஷன் கடை இடமாற்றம் மா.கம்யூ., கட்சி எதிர்ப்பு
ரேஷன் கடை இடமாற்றம் மா.கம்யூ., கட்சி எதிர்ப்பு
ADDED : மார் 21, 2025 02:03 AM
அவிநாசி: ரேஷன் கடையை இடமாற்றம் செய்வதற்கு, மா.கம்யூ., வினர் எதிர்ப்பு தெரிவித்து, கூட்டுறவு சங்க அதிகாரியிடம் மனு கொடுத்தனர்.
திருமுருகன்பூண்டி நகராட்சி, 24வது வார்டு பகுதியில் திருப்பூர் ரோட்டில் ரேஷன் கடை செயல்பாட்டில் உள்ளது. கடையை வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய உள்ளதாக பொதுமக்களுக்கு தகவல் கிடைத்தது. இதனால் 24வது வார்டு அம்பேத்கர் நகர் முதல் 27 வது வார்டு அண்ணா நகர் பகுதி வரை உள்ள பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படும்.
இதனால் ரேஷன் கடையை வேறு இடத்திற்கு மாற்றம் செய்யக்கூடாது என திருமுருகன் பூண்டி நகராட்சி அம்மாபாளையம் மா.கம்யூ., கட்சி கிளைகள் சார்பில் கூட்டுறவு சங்க அதிகாரி பாட்ஷாவிடம் மனு அளித்தனர்.
மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க பரிசீலனை செய்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஒன்றிய குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியம், திருமுருகன் பூண்டி நகர மன்ற உறுப்பினர் சுப்பிரமணியன், கட்சி கிளைச் செயலாளர் ராஜ், ஈஸ்வரன், காமராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.