Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கோபியில் மக்களிடம் குறை கேட்ட எம்.பி.,

கோபியில் மக்களிடம் குறை கேட்ட எம்.பி.,

கோபியில் மக்களிடம் குறை கேட்ட எம்.பி.,

கோபியில் மக்களிடம் குறை கேட்ட எம்.பி.,

ADDED : மே 20, 2025 01:58 AM


Google News
கோபி, திருப்பூர் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட கோபி சட்டசபை தொகுதியில், எம்.பி., சுப்பராயன், மக்களிடம் நேற்று குறை கேட்டார். கோபி யூனியன் கலிங்கியம் பஞ்.,ல், குறைகேட்ட எம்.பி.,யிடம், நாகர்பாளையம் மக்கள் மனு கொடுத்தனர். மனு விபரம்:

ஜல் ஜீவன் திட்டத்தை எங்கள் பகுதியில் முழுமையாக நடைமுறை செய்யவில்லை. ஏழை, கூலி தொழிலாளர் வசிக்கும் நாகர்பாளையத்தில், 300 இணைப்பு வரை வழங்க வேண்டும். இதே பஞ்சாயத்தின் பிற பகுதிகளில், 700 இணைப்பு தரவேண்டும். விடுபட்டுள்ள அனைத்து வீடுகளுக்கும் ஜல் ஜீவன் திட்டத்தில் குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்திருந்தனர்.

துாய்மை காவலர்கள் மனு

கலிங்கியம் பஞ்., துாய்மை காவலர்கள் மனு வழங்கி கூறியதாவது: கலிங்கியம் பஞ்சாயத்தில், 17 பேர் துாய்மை காவலர்களாக, 5,000 ரூபாய் சம்பளத்தில் பணிபுரிகிறோம். இது குடும்பம் நடத்த போதுமானதாக இல்லை. சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும்.

இவ்வாறு கூறினர். மனுவை பெற்ற எம்.பி., சுப்பராயன், 'ஒவ்வொருவர் தலை மீதும், 2.75 லட்சம் ரூபாய் கடன் உள்ளது. அரசின் நிதி நிலை பள்ளத்தில் கிடப்பதை, மேடான பகுதிக்கு கொண்டு வர வேண்டும். உங்கள் கோரிக்கைக்கு, பொருத்திருந்து தீர்வு காணலாம்' என்றார்.

150 பேர் மனு வழங்கல்

கோபி யூனியனுக்கு உட்பட்ட, 14 பஞ்.,களில், திருப்பூர் எம்.பி., சுப்பராயன் நேற்று காலை, 9:30 மணி முதல், மாலை, 6:00 மணி வரை மக்களிடம் குறை கேட்டார். இதில் வீட்டு மனை பட்டா, மகளிர் உரிமை தொகை, அடிப்படை பிரச்னை என, 150 மனுக்களை பெற்று, அந்தந்த துறை வாரியான அதிகாரிகளிடம் வழங்கி தீர்வு காண வலியுறுத்தினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us