/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மவுண்ட் லிட்ராஜீ பள்ளி மாணவர்கள் அசத்தல் மவுண்ட் லிட்ராஜீ பள்ளி மாணவர்கள் அசத்தல்
மவுண்ட் லிட்ராஜீ பள்ளி மாணவர்கள் அசத்தல்
மவுண்ட் லிட்ராஜீ பள்ளி மாணவர்கள் அசத்தல்
மவுண்ட் லிட்ராஜீ பள்ளி மாணவர்கள் அசத்தல்
ADDED : மே 20, 2025 11:17 PM
திருப்பூர்,; மங்கலம் - பல்லடம் ரோட்டிலுள்ள மவுண்ட் லிட்ராஜீ பள்ளி, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்2 பொதுத்தேர்வில் நுாறு சதவீத தேர்ச்சி பெற்று, மாவட்ட அளவில் சிறப்பிடம் பிடித்துள்ளது.
பிளஸ்2 பொதுத்தேர்வில், மாணவி அம்ரிதா 97 சதவீத மதிப்பெண்களுடன் பள்ளியில் முதலிடம். 96 சதவீத மதிப்பெண்களுடன் கவியரசு இரண்டாமிடம்; 91 சதவீதத்துடன் விதுல்மூன்றாமிடம்.
மாணவி அம்ரிதா பேஷன் ஸ்டடிஸ் பாடத்தில், 100 மதிப்பெண் பெற்று, மாவட்ட அளவில் சாதனை படைத்துள்ளார். 17க்கும் மேற்பட்ட மாணவர்கள், அனைத்து பாடங்களிலும் 90 சதவீத மதிப்பெண்களையும்; 22க்கும் மேற்பட்ட மாணவர்கள் 80 சதவீத மதிப்பெண்; 14க்கும் மேற்பட்டோர், 70 சதவீத மதிப்பெண் பெற்றுள்ளனர்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், 97 சதவீத மதிப்பெண்களுடன் பள்ளியில் முதலிடம்; 96 சதவீத மதிப்பெண்களுடன், நிதின் இரண்டாமிடம்; 94 சதவீதத்துடன் ஸ்ரீசியோஷ் மூன்றாமிடம் பிடித்துள்ளனர். அனைத்துபாடங்களிலும் 53 க்கும் மேற்பட்ட மாணவர்கள் 90 சதவீத மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
சாதித்த மாணவ, மாணவியரை பள்ளியின் நிறுவனர் கிருஷ்ணன், தாளாளர் செந்தில்குமார் ஆகியோர், பாராட்டி, கல்வி உதவித்தொகை வழங்கினர். பள்ளி முதல்வர் பார்த்திபன், ஆசிரியர்கள், மாணவர்களை பாராட்டினார். இப்பள்ளியில் கே.ஜி., முதல் பிளஸ்1 வகுப்பு வரை அட்மிஷன் நடைபெறுகிறது. மாணவர் சேர்க்கை தொடர்பாக, 73737 20232 என்கிற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.