Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ சேவூர் பெருமாள் கோவிலில் நிலவு கால் பூஜை

சேவூர் பெருமாள் கோவிலில் நிலவு கால் பூஜை

சேவூர் பெருமாள் கோவிலில் நிலவு கால் பூஜை

சேவூர் பெருமாள் கோவிலில் நிலவு கால் பூஜை

ADDED : ஜூலை 02, 2025 11:49 PM


Google News
Latest Tamil News
சேவூர்; அவிநாசி அருகேயுள்ள சேவூரில், 1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண பெருமாள் கோவில் உள்ளது. 2002ம் ஆண்டு கோவிலின் வசந்த மண்டபம் பகுதி மேற்கூரை கற்கள் பெயர்ந்து விழுந்தது.

இதனால், ஹிந்து அறநிலையத்துறையினரால் கும்பாபிஷேக திருப்பணிகளுக்காக பாலாலயம் நடைபெற்றது. 2003ம் ஆண்டு திருப்பணிகள் துவங்கியது.

ஆனால், பணிகள் பாதியில் நின்றது. இதனையடுத்து கடந்த ஏப்., 23ம் தேதி கும்பாபிஷேக திருப்பணிகள் தடைபடாமல் தொடர்ந்து நடந்திட சுதர்ஷன ஹோமம் நடைபெற்றது. அதனையடுத்து தொடர்ந்து கும்பாபிஷேக திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகிறது.

அதில் சொர்க்கவாசல் அமைத்து மதில்சுவர் கட்டுதல், முகப்பு தோரண வாயில் அமைத்து மதில்சுவர் கட்டுதல், கோவில் வளாகத்தில் நடைபாதை கல் தளம் அமைத்தல், கோபுரங்களுக்கு பஞ்சவர்ணம் தீட்டுதல், மடப்பள்ளி அமைத்தல் ஆகிய திருப்பணி நடைபெறுகிறது.

நேற்று நடைமண்டப நிலவு கால் வைத்தல் நிகழ்ச்சியில், தாராபுரம் வரன்பாளையம் திருநாவுக்கரசர் திருமடம் தலைவர் மவுன சிவாச்சலஅடிகள் தலைமையில், சிவவாக்கியர் தம்பிரான் ரிஷபானந்தர் முன்னிலையில் சிறப்பு ஹோமங்கள் நடைபெற்று, நடைமண்டபத்தில் நிலவுக்கால் வைக்கப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us