/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பருவ மழை துவக்கம்; உழவு பணிகள் தீவிரம் பருவ மழை துவக்கம்; உழவு பணிகள் தீவிரம்
பருவ மழை துவக்கம்; உழவு பணிகள் தீவிரம்
பருவ மழை துவக்கம்; உழவு பணிகள் தீவிரம்
பருவ மழை துவக்கம்; உழவு பணிகள் தீவிரம்
ADDED : ஜூன் 09, 2025 09:44 PM
உடுமலை; உடுமலை சுற்றுப்பகுதிகளில், தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், பயிர் சாகுபடி மேற்கொள்ள உழவு பணிகளை விவசாயிகள் துவக்கியுள்ளனர்.
உடுமலை சுற்றுப்பகுதிகளில், விவசாயம் பிரதானமாக உள்ளது. நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை முன்னதாக துவங்கிய நிலையில், வரும் காலங்களில் தீவிரமடைய வாய்ப்புள்ளது.
இதனால், மானாவாரி நிலங்களில், மக்காச்சோளம், தானிய பயிர்கள் மற்றும் இறவை பாசன நிலங்களில் காய்கறி பயிர்கள் சாகுபடி செய்ய விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.
வேளாண் துறை அதிகாரிகள் கூறுகையில், 'பருவமழைக்கு முன் உழவு செய்யும் போது, நிலத்தில் அதிக காற்றோட்டம் ஏற்பட்டு, மண்ணிலுள்ள பூச்சிக்கொல்லி மருந்துகளின் எஞ்சிய நச்சுக்கள் சிதைக்கப்படுகிறது.
மேலும், காற்று மண்டலத்திலுள்ள நைட்ரஜன், மழை நீருடன் சேர்ந்து மண்ணிற்குள் செல்வதால், பயிர் சாகுபடிக்கு ஏற்ற வகையில், மண்ணின் வளம் பெருகும் என்பதால், தற்போது உழவு பணிகளில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்,' என்றனர்.