/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மோடி பிறந்த நாள் விழா; சமபோஜன விருந்து மோடி பிறந்த நாள் விழா; சமபோஜன விருந்து
மோடி பிறந்த நாள் விழா; சமபோஜன விருந்து
மோடி பிறந்த நாள் விழா; சமபோஜன விருந்து
மோடி பிறந்த நாள் விழா; சமபோஜன விருந்து
ADDED : செப் 22, 2025 10:47 PM

உடுமலை; குடிமங்கலம் தெற்கு ஒன்றிய பா.ஜ., சார்பில், பிரதமர் மோடி பிறந்தநாளையொட்டி, இரு வார சேவை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதையொட்டி, நஞ்சேகவுண்டன்புதுார் கிராமத்தில், இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.
ஒன்றிய தலைவர் சற்குணம் தலைமை வகித்தார். திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் மோகனப்பிரியா முகாமை துவக்கி வைத்தார்.
முகாமில், சுற்றுப்பகுதி கிராம மக்களுக்கு கண் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, அறுவை சிகிச்சைக்கு, 24 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட அமைப்பாளர் சம்பத், ஒன்றிய பொது செயலாளர் ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அனிக்கடவு, நஞ்சேகவுண்டன்புதுார் கிளை நிர்வாகிகள் முகாமை ஒருங்கிணைத்தனர்.
* வால்பாறை பா.ஜ., சார்பில் பிரதமர் மோடியின், 75வது பிறந்த நாள் விழா, துாய்மை பணியாளர்களுக்கு சமபோஜன விருந்து, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என முப்பெரும் விழா, மண்டல் தலைவர் செந்தில்முருகன் தலைமையில் நடந்தது.
தனியார் திருமண மண்டபத்தில் நடந்த விழாவில், பா.ஜ., மாவட்ட தலைவர் சந்திரசேகர், மண்டல் பார்வையாளர் பாபாரமேஷ், பா.ஜ., மாவட்ட துணைத்தலைவர் தங்கவேல் ஆகியோர், துாய்மை பணியாளர்களை கவுரவித்து, நலத்திட்ட உதவிகளை வழங்கினர். தொடர்ந்து அனைவருக்கும் சமபோஜன விருந்து நடந்தது.
விழாவில், பா.ஜ., வால்பாறை மண்டல் பொதுசெயலாளர் முகேஸ், மாவட்ட மகளிர் அணி செயலாளர் கனகவல்லி, மாவட்ட வர்த்தக அணி செயலாளர் வினு உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.