ADDED : மார் 22, 2025 06:51 AM
பொங்கலுார் : பொங்கலுார் அருகே காணாமல் போனவர் சடலமாக மீட்கப்பட்டார்.
பொங்கலுார் ஒன்றியம், ராமே கவுண்டம்பாளையம் செட்டியப்பன் மகன் விஜயன், 20; மெக்கானிக். கடந்த 20ம் தேதி காணாமல் போய்விட்டார். இது குறித்த புகாரின் பேரில் அவிநாசி பாளையம் போலீசார் அவரை தேடி வந்தனர்.
நேற்று மாலை பொங்கலூர் கரட்டுப்பாளையம் பி.ஏ.பி., வாய்க்காலில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. அவரது இறப்புக்கான காரணம் குறித்து அவிநாசிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.