ADDED : ஜூன் 30, 2025 12:24 AM
காங்கயம் - திருப்பூர் வழித்தடத்தில் இயக்கப்படும் அரசு டவுன் பஸ்சில் நேற்று பயணம் செய்த பெண் பயணி ஒருவர், 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மொபைல்போனை பஸ்சில் தவற விட்டார்.
பணியில் இருந்த நடத்துனர் முத்துக்குமார், 50, கண்டெடுத்த மொபைல் போன் குறித்து விசாரித்து, சம்பந்தப்பட்ட பெண் பயணியிடம் ஒப்படைத்தார். அவரை சக ஊழியர்கள் பாராட்டினர்.