Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ சிறுபாசனம், நீர் நிலை கணக்கெடுப்பு பணி தீவிரம்; இம்மாத இறுதிக்குள் முடிக்க இலக்கு

சிறுபாசனம், நீர் நிலை கணக்கெடுப்பு பணி தீவிரம்; இம்மாத இறுதிக்குள் முடிக்க இலக்கு

சிறுபாசனம், நீர் நிலை கணக்கெடுப்பு பணி தீவிரம்; இம்மாத இறுதிக்குள் முடிக்க இலக்கு

சிறுபாசனம், நீர் நிலை கணக்கெடுப்பு பணி தீவிரம்; இம்மாத இறுதிக்குள் முடிக்க இலக்கு

ADDED : செப் 14, 2025 11:09 PM


Google News
உடுமலை; அனைத்து பகுதிகளிலும், சிறுபாசனக் கணக்கெடுப்பு மற்றும், 2வது நீர் நிலைக்கணக்கெடுப்பு பணிகளை, இம்மாத இறுதிக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் மத்திய அரசு நீர் நிலைகள், நீர் ஆதாரங்கள் குறித்த கணக்கெடுப்பை மேற்கொண்டு வருகிறது. அவ்வகையில், 2023 - 24ம் ஆண்டில், 7வது சிறுபாசனம் மற்றும் 2வது நீர் நிலைகள் கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி கடந்த ஆக., மாதம் முதல் அனைத்து கிராமங்கள் மற்றும் நகரப்பகுதியில் உள்ள திறந்த வெளி கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகள், குளம், குட்டை, ஏரி, கண்மாய், ஊரணி உள்ளிட்ட நீர் நிலைகள் குறித்த விபரங்கள் கணக்கெடுக்கப்படுகிறது.

இந்த விபரங்கள் அனைத்தும், மத்திய நீர் வள ஆதாரத்துறை அமைச்சகம் வாயிலாக தொகுக்கப்படும். இப்பணி ஊராட்சி பகுதிகளில், உரிய கிராம நிர்வாக அலுவலர்கள் வாயிலாகவும், நகரப்பகுதியில் உள்ளாட்சி அமைப்பு பணியாளர்களாலும் மேற்கொள்ளப்படுகிறது.

கணக்கெடுப்பு பணியில் விவசாயிகள், பொதுமக்கள் தாங்கள் பயன்படுத்தும் நீர்ப்பாசனம், குடிநீர் ஆதாரம் மற்றும் பயன்பாடு குறித்து தெரிவிக்க வேண்டும்.

இந்த விபரங்கள், மாவட்ட அளவில் புள்ளியில் துறையில் பெற்று, தொகுத்து மத்திய அரசுக்கு வழங்கப்படவுள்ளது.

இத்திட்டத்தின் கீழ்,ஊராட்சி பகுதிகளில் மட்டும், பொதுமக்களிடம் நேரடியாக குடிநீர் ஆதாரம் குறித்த விபரங்கள் பெறப்படுகிறது. நகரப் பகுதியில், நீர் நிலை குறித்த கணக்கெடுப்பு மட்டும் போதும் என்று தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இப்பணி தற்போது மும்முரமாக நடந்து வருகிறது.

மாவட்ட புள்ளியியல் துறை உதவி இயக்குநர் விஜயலட்சுமி கூறுகையில்,'' சிறு பாசன கணக்கெடுப்பு பணி, மாவட்டம் முழுவதும் தீவிரமாக நடந்து வருகிறது. இம்மாத இறுதிக்குள் இப்பணியை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திட்டமிட்டபடி பணியை முடிக்கும் வகையில் அறிவுறுத்தல் வழங்கி பணிகள் நடக்கிறது,'' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us