/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/அமைச்சர் சாமிநாதனின் தந்தை காலமானார்அமைச்சர் சாமிநாதனின் தந்தை காலமானார்
அமைச்சர் சாமிநாதனின் தந்தை காலமானார்
அமைச்சர் சாமிநாதனின் தந்தை காலமானார்
அமைச்சர் சாமிநாதனின் தந்தை காலமானார்
ADDED : பிப் 24, 2024 01:24 AM

திருப்பூர்;தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதனின் தந்தை பெருமாள்சாமி கவுண்டர், நேற்று காலமானார்; அவருக்கு வயது 94.
திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகேயுள்ள முத்துாரை சேர்ந்த இவர், உடல் நலக்குறைவால் கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நேற்று காலை 8:00 மணிக்கு காலமானார். இவருக்கு சாமிநாதன் உட்பட இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.
இவரது உடல் சொந்த ஊரான முத்துார் கொண்டு வரப்பட்டது. பொதுமக்கள், கட்சியினர், உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர். அமைச்சர்கள் முத்துசாமி, மகேஷ், எம்.பி., கணேசமூர்த்தி, எம்.எல்.ஏ., ஈஸ்வரன், மேயர் தினேஷ்குமார், மண்டல குழு தலைவர் பத்மநாபன் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர். நேற்று மாலை அவரது உடல் அவருக்குச் சொந்தமான பங்களா தோட்டத்தில் தகனம் செய்யப்பட்டது.
முதல்வர் ஸ்டாலின், இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.