/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கொடுவாய் மெரிட் பள்ளி மாணவ, மாணவியர் 'மெரிட்' கொடுவாய் மெரிட் பள்ளி மாணவ, மாணவியர் 'மெரிட்'
கொடுவாய் மெரிட் பள்ளி மாணவ, மாணவியர் 'மெரிட்'
கொடுவாய் மெரிட் பள்ளி மாணவ, மாணவியர் 'மெரிட்'
கொடுவாய் மெரிட் பள்ளி மாணவ, மாணவியர் 'மெரிட்'
ADDED : மே 18, 2025 12:26 AM

திருப்பூர் : கொடுவாய், மெரிட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி நிர்வாகிகள் கூறியதாவது:
எங்கள் பள்ளி மாணவர்கள் தொடர்ந்து பொது தேர்வில், 100 சத தேர்ச்சி பெற்று சாதனை புரிந்து வருகின்றனர். அவ்வகையில், நடப்பாண்டிலும் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். பள்ளி முதலிடம் ஸ்வீட்லின் பிரார்த்தனா, 495 மதிப்பெண் பெற்றுள்ளார். மாணவர் சுஹிஷ்ணு, 492 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம், பூர்ணாஸ்ரீ, 490 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம்.
இப்பள்ளி மாணவர்கள் எட்டு பேர், 480 மதிப்பெண்ணுக்கு மேலும், 25 பேர் 450க்கு மேலும், 38 பேர் 400க்கு மேலும் மதிப்பெண் பெற்றுள்ளனர். மாணவர்கள் கல்வியுடன், ஒழுக்கம், விளையாட்டுக்கும் உரிய முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. கராத்தே, சிலம்பம், யோகா, நடனம், இசை, ஹிந்தி வகுப்புகள் உள்ளன. உயர் கல்விக்கு உரிய வழிகாட்டுதல் வழங்கப்படுகிறது. தற்போது எல்.கே.ஜி., பிளஸ் 2 வரை சேர்க்கை நடக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.