/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/கே.பி.ஆர்., மில்லில் மருத்துவ முகாம்கே.பி.ஆர்., மில்லில் மருத்துவ முகாம்
கே.பி.ஆர்., மில்லில் மருத்துவ முகாம்
கே.பி.ஆர்., மில்லில் மருத்துவ முகாம்
கே.பி.ஆர்., மில்லில் மருத்துவ முகாம்
ADDED : ஜன 11, 2024 07:15 AM

அவிநாசி : 'மக்களைத் தேடி' மருத்துவம் திட்டத்தின் கீழ், அவிநாசி அருகே தெக்கலுாரில் உள்ள கே.பி.ஆர்., கார்மென்ட்ஸ் டிவிஷன் குவான்டம் அலகு -2ல் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது.
இதில், மில்லில் பணியாற்றும், 1943 தொழிலாளர்களில், 500 தொழிலாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில். திருப்பூர் மாவட்ட சுகாதார துணை இயக்குனர் ஜெகதீஷ்குமார், தொற்றா நோய்களுக்கான திட்ட அலுவலர் பாபு சுதாகர் முன்னிலை வகித்தனர்.
அவிநாசி வட்டார மருத்துவ அலுவலர் சக்திவேல், கே.பி.ஆர்., மில் மனித வள மேம்பாட்டு துறை தலைமை மேலாளர் தங்கவேல், தொழிலகம் பாதுகாப்பு மற்றும் சுகாதார உதவி இயக்குனர் சேதுபதி, அவிநாசி வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மனோகரன், சுகாதார ஆய்வாளர் பரமன் மற்றும் மருத்துவக் குழுவினர் பங்கேற்றனர்.