/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கடல் நீச்சல் போட்டியில் பதக்கம்; மாற்றுத்திறன் மாணவர் அபாரம் கடல் நீச்சல் போட்டியில் பதக்கம்; மாற்றுத்திறன் மாணவர் அபாரம்
கடல் நீச்சல் போட்டியில் பதக்கம்; மாற்றுத்திறன் மாணவர் அபாரம்
கடல் நீச்சல் போட்டியில் பதக்கம்; மாற்றுத்திறன் மாணவர் அபாரம்
கடல் நீச்சல் போட்டியில் பதக்கம்; மாற்றுத்திறன் மாணவர் அபாரம்
ADDED : ஜூன் 17, 2025 12:19 AM

திருப்பூர்,; சிறப்பு குழந்தைகளுக்கான தேசிய அளவிலான கடல் நீச்சல் போட்டியில் பங்கேற்க, திருப்பூர் மாணவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
திருப்பூர், புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே செயல்படும் துவாரகா சிறப்பு குழந்தைகளுக்கான பள்ளியில் நிமேஷ் வர்ஷன், 16 என்ற மாணவன், 10ம் வகுப்பு பயின்று வருகிறார்.
இவர் நீச்சல் விளையாட்டில் ஆர்வமிக்கவராக இருப்பதை அறிந்த சிறப்பு பள்ளி நிர்வாகத்தினர், நீச்சல் பயிற்சியாளர்கள் சுதீஷ் மற்றும் சிபு ஆகியோர் வாயிலாக பயிற்சி பெறுவதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.
சென்னை, கோவளம் கடற்கரையில் நடந்த கடல் நீச்சல் போட்டியில் பங்கேற்ற நிமேஷ் வர்ஷன், சிறப்பு குழந்தைகளுக்கான ஒரு கி.மீ., பிரிவில், முதலிடம் தக்க வைத்து, பதக்கம், சான்றிதழ் பெற்றார்.
இதன் விளைவாக, ஆக., 24ல், புதுவையில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான கடல் நீச்சல் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார்.
மாணவனின் திறமையில், அவரது பெற்றோர் மகிழ்ச்சியடைந்தனர். ஊக்குவித்த பள்ளி செயலர்கள் விஜயபானு, இந்து மற்றும் பயிற்சியாளர்களையும் பாராட்டினர்.