/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ 37 மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால் வழங்க அளவீடு 37 மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால் வழங்க அளவீடு
37 மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால் வழங்க அளவீடு
37 மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால் வழங்க அளவீடு
37 மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால் வழங்க அளவீடு
ADDED : செப் 10, 2025 09:47 PM
- நமது நிருபர் -
திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில், செயற்கை கால் அளவீடு முகாம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார் துவக்கி வைத்தார்.
முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டம், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள், நலம் காக்கும் ஸ்டாலின் திட்டங்களில் விண்ணப்பித்த, 50 மாற்றுத்திறனாளிகளுக்கு, அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இவர்களில், இந்த முகாமில், 37 மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்.
சேலத்திலிருந்து வந்த தொழில்நுட்ப குழுவினர், மாற்றுத்திறனாளிகளின் கால் அளவீடு செய்தனர். 'கால் அளவீடு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு, நவீன செயற்கை கால் தயாரிக்கப்பட்டு, விரைவில் வழங்கப்படும்,' என்று, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தெரிவித்தார்.