/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ 7வது நிதி ஆணையக்குழுவில் உறுப்பினராக மேயர் நியமனம் 7வது நிதி ஆணையக்குழுவில் உறுப்பினராக மேயர் நியமனம்
7வது நிதி ஆணையக்குழுவில் உறுப்பினராக மேயர் நியமனம்
7வது நிதி ஆணையக்குழுவில் உறுப்பினராக மேயர் நியமனம்
7வது நிதி ஆணையக்குழுவில் உறுப்பினராக மேயர் நியமனம்
ADDED : மே 31, 2025 05:21 AM
திருப்பூர்; தமிழக அரசின் ஏழாவது மாநில நிதி ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த அமைப்பின் தலைவராக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அலுவலர் அலாவுதீன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் அலுவல் சாரா உறுப்பினராக திருப்பூர் மேயர் தினேஷ்குமார்; அலுவல் வழி உறுப்பினர்களாக நகராட்சி நிர்வாக இயக்குநர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி கமிஷனர், பேரூராட்சிகளின் கமிஷனர் ஆகியோரும், உறுப்பினர் செயலராக, நிதித்துறை அரசு துணை செயலர் ஐ.ஏ.எஸ், அதிகாரி பிரத்திக் தாயள் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசின் நிதித்துறை முதன்மை செயலர் இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
இந்த அமைப்பு, உள்ளாட்சி அமைப்புகளில் நிதி நிலையை ஆய்வு செய்து, மாநில அரசு வழங்கும் நிதிப்பகிர்வு குறித்து பரிந்துரை செய்யும். அவ்வகையில், மாநில அரசு விதிக்கும் வரி, தீர்வை, சுங்கம் மற்றும் கட்டணங்களின் நிகர வருவாயை மாநில அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் பகிர்ந்து கொள்ளுதல், அமைப்புகளுக்கு உரிய பங்கை பிரித்தளித்தல்; மாநில அரசு நிதியிலிருந்து மானியங்கள் பரிந்துரைத்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ளும்.