/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/மாசி மகத் தேரோட்டம் பூண்டியில் கோலாகலம்மாசி மகத் தேரோட்டம் பூண்டியில் கோலாகலம்
மாசி மகத் தேரோட்டம் பூண்டியில் கோலாகலம்
மாசி மகத் தேரோட்டம் பூண்டியில் கோலாகலம்
மாசி மகத் தேரோட்டம் பூண்டியில் கோலாகலம்
ADDED : பிப் 24, 2024 11:03 PM

திருப்பூர்:திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவிலில் நேற்று மாசி மகத் தேரோட்டம் கோலாகலமாக நடந்தது.
அலங்கரிக்கப்பட்ட தேர்களில் எழுந்தருளிய உற்சவமூர்த்திகள், 'ஓம் நமசிவாய...' கோஷத்துடன், தேர்வீதிகளில் உலா வந்தனர். இன்று தேர்கள் நிலையை வந்தடைகின்றன.
மனநோய் நீக்கும் புனித தலமாக விளங்கும் திருமுருகன்பூண்டி, திருமுருகநாத சுவாமி கோவிலில் மாசி மக தேர்த்திருவிழா விமரிசையாக நடந்து வருகிறது. கடந்த,18ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது.
சூரிய, சந்திர மண்டல காட்சி, பூதவாகனம், சிம்ம வாகன காட்சி, புஷ்ப விமான காட்சி, பஞ்சமூர்த்திகள் புறப்பாடு மற்றும் ரிஷப வாகன காட்சி என, தினமும் உற்சவ மூர்த்திகள் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
நேற்று முன்தினம், சுவாமிகளுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. நேற்று அதிகாலை, சோமாஸ்கந்தர், வள்ளி தெய்வானை சமேத சண்முகநாதர், முயங்கு பூண்முலை வல்லியம்மை, உற்சவமூர்த்திகள், திருத்தேர்களுக்கு எழுந்தருளினர்.
மாலை, 4:00 மணிக்கு, தேர் வடம் பிடித்து, தேரோட்டம் துவங்கியது. பக்தர்களின்,'ஓம் நமசிவாய' கோஷத்துடன், தேர்வீதிகளில் தேர்கள் உலா வந்தன.
இன்று மாலை, மீண்டும் வடம் பிடித்து, தேர்கள் நிலையை வந்தடைய உள்ளன. அதனை தொடர்ந்து, குதிரை மற்றும் சிம்ம வாகன காட்சியும், தெப்பத்திருவிழா நாளையும், 26ல் நடக்கிறது; சுந்தரருடன், எம்பெருமான் வேடுபறி திருவிளையாடல் நிகழ்த்திய வைபவம், 27ம் தேதி நடக்கிறது. வரும், 28ல் பிரம்ம தாண்டவ தரிசன காட்சியும், 29ம் தேதி மஞ்சள் நீர்விழாவும் நடைபெற உள்ளது.