/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மார்க்கெட் வியாபாரிகள் கமிஷனருடன் சந்திப்பு மார்க்கெட் வியாபாரிகள் கமிஷனருடன் சந்திப்பு
மார்க்கெட் வியாபாரிகள் கமிஷனருடன் சந்திப்பு
மார்க்கெட் வியாபாரிகள் கமிஷனருடன் சந்திப்பு
மார்க்கெட் வியாபாரிகள் கமிஷனருடன் சந்திப்பு
ADDED : ஜூன் 30, 2025 11:38 PM
திருப்பூர்; திருப்பூர் தினசரி மார்க்கெட் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் நேற்று, மாநகராட்சி கமிஷனர் அமித்தை சந்தித்து அளித்த மனு விவரம்:
காமராஜ் ரோட்டில் உள்ள மாநகராட்சி தினசரி மார்க்கெட் வளாகத்தை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புதிதாக கட்ட திட்டமிடப்பட்டு, எங்களை தற்காலிகமாக, காட்டன் மார்க்கெட் வளாகத்துக்கு இடமாற்றம் செய்தனர். அங்கு சதுரடி 15 ரூபாய் என்ற வாடகை அடிப்படையில், வாடகை நிர்ணயித்து, அதை சங்கம் சார்பில் வசூலித்து மாநகராட்சியில் செலுத்தி வருகிறோம்.
நான்கு ஆண்டு கடந்தும் கூட, புதிய மார்க்கெட் வளாகம் திறக்கப்படாமல் உள்ளது. எங்கள் கோரிக்கைகளை ஏற்று, கட்டட வளாகத்தில் மாற்றங்களை செய்து விரைந்து திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.