ADDED : ஜன 28, 2024 11:52 PM

தமிழ் மாருதம் மக்கள் அமைப்பு சார்பில், 'பசுமையை நோக்கி மராத்தான் போட்டி' திருப்பூர், வாவிபாளையத்தில் நடைபெற்றது.
மாநகராட்சி 5வது வார்டு அ.தி.மு.க., செயலாளர் நாச்சிமுத்து, தொடங்கி வைத்தார். போட்டி வாவிபாளையத்தில், தொடங்கி, கணக்கம் பாளையத்தில் நிறைவடைந்தது. முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பரிசுகளை தி.மு.க., பாண்டியன் நகர் பகுதி செயலாளர் ஜோதி, மா.கம்யூ., மாவட்ட குழு உறுப்பினர் சிகாமணி ஆகியோர் வழங்கினார். அனைவருக்கும் சான்றிதழ், மரக்கன்று வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் ஆனந்தன், செயலாளர் சீனிவாசன், பொருளாளர் ராஜலிங்கம் மற்றும் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.