/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மக்காச்சோள விதை தேவைக்கேற்ப இருப்பு மக்காச்சோள விதை தேவைக்கேற்ப இருப்பு
மக்காச்சோள விதை தேவைக்கேற்ப இருப்பு
மக்காச்சோள விதை தேவைக்கேற்ப இருப்பு
மக்காச்சோள விதை தேவைக்கேற்ப இருப்பு
ADDED : செப் 10, 2025 10:00 PM
உடுமலை; வடகிழக்கு பருவமழை சீசனில், மக்காச்சோளம் சாகுபடி செய்ய தேவையான விதைகள், குறிச்சிக்கோட்டை துணை வேளாண் விரிவாக்க மையத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் வட்டாரங்களில், பி.ஏ.பி., பாசனத்துக்கு பிரதானமாக மக்காச்சோளம் சாகுபடி செய்யப்படுகிறது. மக்காச்சோளத்துக்கு நல்ல விலை கிடைப்பதால், வடகிழக்கு பருவமழை சீசனில், மானாவாரியாகவும் சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்ட துவங்கியுள்ளனர்.
விரைவில் பருவமழை சீசன் துவங்க உள்ள நிலையில், சாகுபடிக்கான பணிகளை விவசாயிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில், உடுமலை வட்டார வேளாண்துறை சார்பில், குறிச்சிக்கோட்டை துணை வேளாண் விரிவாக்க மையத்தில், மானிய விலையில், விற்பனை செய்ய வீரிய ஒட்டு மக்காச்சோள விதை இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மக்காச்சோளம் சாகுபடி செய்யும் விவசாயிகள் வாங்கி பயன்படுத்திக்கொள்லாம். விவசாயிகள் சிட்டா, ஆதார் அட்டை நகல், வங்கி பாஸ்புக் நகலுடன் அம்மையத்தை தொடர்பு கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு
வேளாண் உதவி அலுவலர் அமல்ராஜ் 9751293606 என்ற மொபைல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என வேளாண்துறையினர் தெரிவித்துள்ளனர்.