/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மதுரை பெண் கொலையா? சடலத்தை தேடும் போலீஸ் மதுரை பெண் கொலையா? சடலத்தை தேடும் போலீஸ்
மதுரை பெண் கொலையா? சடலத்தை தேடும் போலீஸ்
மதுரை பெண் கொலையா? சடலத்தை தேடும் போலீஸ்
மதுரை பெண் கொலையா? சடலத்தை தேடும் போலீஸ்
ADDED : ஜூன் 01, 2025 01:45 AM

திருப்பூர்: மதுரை மாவட்டம், உசிலம்பட்டியைச் சேர்ந்தவர் அமுதா, 39. இவரது கணவர் இறந்து விட்டார். இவருக்கு, உறவினரான தவமணி, 41, என்பவருடன் எட்டு ஆண்டுகளாக பழக்கம் இருந்தது.
ஏப்., 18ம் தேதி அமுதா மாயமானார். புகாரின்படி, உசிலம்பட்டி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை தேடி வந்தனர். விசாரணையில், அமுதா மாயமான குறிப்பிட்ட நாட்களில், தவமணி திருப்பூரில் இருந்ததால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
உசிலம்பட்டி போலீசார் விசாரித்ததில், அமுதாவை கொலை செய்து, திருப்பூரில் உள்ள நொய்யல் ஆற்றின் கரையில் உடலை புதைத்ததாக, அவர் தெரிவித்தார். இதனால், தனிப்படை போலீசார் தவமணியை திருப்பூருக்கு அழைத்து வந்து, தீயணைப்பு துறையினர் உதவியோடு சடலத்தை தேடினர்.
ஏறத்தாழ, 5 கி.மீ., துாரம் நொய்யல் ஆற்றங்கரையோரப் பகுதியில் தேடினர். ஆனால், கொலை செய்யப்பட்டு புதைத்ததற்கான எவ்வித தடயமும் தென்படவில்லை. போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.