/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படிபட்ட சிவபெருமான்! பரவசத்துடன் வழிபட்ட பக்தர்கள் பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படிபட்ட சிவபெருமான்! பரவசத்துடன் வழிபட்ட பக்தர்கள்
பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படிபட்ட சிவபெருமான்! பரவசத்துடன் வழிபட்ட பக்தர்கள்
பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படிபட்ட சிவபெருமான்! பரவசத்துடன் வழிபட்ட பக்தர்கள்
பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படிபட்ட சிவபெருமான்! பரவசத்துடன் வழிபட்ட பக்தர்கள்
ADDED : செப் 02, 2025 11:21 PM

திருப்பூர்; திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், பிட்டுக்கு மண் சுமந்த நிகழ்வும், ஆவணி மூலநட்சத்திர வழிபாடும் கோலாகலமாக நேற்று நடந்தது.
மதுரையை அரிமர்த்தன பாண்டியன் ஆண்ட போது, வந்தியம்மை என்ற வாணிய குல பெண் வாழ்ந்துவந்தார்; சிவபக்தையான அவர், பிட்டு விற்பனை செய்து வந்தார். வைகை கரை உடைப்பை சரிசெய்ய, வந்தியம்மைக்கு பதிலாக கூலி ஆள் வேடத்தில் வந்த சிவபெருமான் வேலை செய்தார்.
வேலைசெய்யாமல் உறங்கிய அவரை, பணியை பார்வையிட வந்த பாண்டியன் பிரம்பால் அடித்தான். அந்த அடி, அனைவரது முதுகிலும் விழுந்தது. பிறகு, சிவபெருமான் வந்தியம்மையை ஆட்கொண்டு அருளினார். அதன்படி, ஆவணி மாதத்தில் வரும் மூலநட்சத்திர நாளில், பிட்டுக்கு மண் சுமந்த படலம், சிவாலயங்களில் கொண்டாடப்படுகிறது.
திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், திருப்பூர் வாணிய செட்டியார் சமூகம் சார்பில், 73 வது ஆண்டு பிட்டுத்திருவிழா நேற்று நடந்தது. மாலை, 6:00 மணிக்கு அபிேஷகமும், இரவு, 700 மணிக்கு, பிட்டுக்கு மண் சுமந்த நிகழ்வும் நடைபெற்றது. தொடர்ந்து, மகாதீபாராதனை நடந்தது.
எஸ்.பெரியபாளையம் சுக்ரீஸ்வரர் கோவிலில், திருப்பூர் மாவட்ட வாணியர் சங்கம் சார்பில், 2ம் ஆண்டு பிட்டுத்திருவிழா நேற்று நடந்தது. காலை, 11:00 மணிக்கு, ஆவுடைநாயகி, சுக்ரீஸ்வரருக்கு மகா அபிேஷகமும், பிட்டுக்கு மண் சுமந்த படல காட்சியும், தொடர்ந்து மகாதீபாராதனையும் நடந்தது. சிவனடியார்களின் சிவகண வாத்திய இன்னிசையுடன், பிட்டுத்திருவிழா விமரிசையாக நடந்தது.
அவிநாசி வாணியர் சங்கம் சார்பில், 142ம் ஆண்டு பிட்டுத்திருவிழா, அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில், நேற்று விமரிசையாக நடைபெற்றது . இதையொட்டி, சிவபெருமானுக்கு அபிஷேகம் ஆராதனைகள் நடந்தது.
அதனை தொடர்ந்து, ஆனந்தவல்லி சமேத சந்திரசேகரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பிட்டுக்கு மண் சுமந்த வரலாற்றினை பக்தர்களுக்கு காட்சியளிக்கும் விதமாக நான்கு ரத வீதிகளிலும் திருவீதியுலா வந்து அருள்பாலித்தார். நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, எம்பெருமானை வழிபட்டனர். பங்கேற்ற பக்தர்களுக்கு பச்சரிசி பிட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.