/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/உள்ளூர் விடுமுறை அறிவிப்பு: அவிநாசிக்கு கூடுதல் பெருமை!உள்ளூர் விடுமுறை அறிவிப்பு: அவிநாசிக்கு கூடுதல் பெருமை!
உள்ளூர் விடுமுறை அறிவிப்பு: அவிநாசிக்கு கூடுதல் பெருமை!
உள்ளூர் விடுமுறை அறிவிப்பு: அவிநாசிக்கு கூடுதல் பெருமை!
உள்ளூர் விடுமுறை அறிவிப்பு: அவிநாசிக்கு கூடுதல் பெருமை!
ADDED : ஜன 31, 2024 12:32 AM
திருப்பூர்:'திருப்பூர் மாவட்டத்தின் அடையாளமாக விளங்கும் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிேஷகத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டதான் வாயிலாக, கோவிலுக்கு கூடுதல் பெருமை கிடைத்துள்ளது' என, பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.
சுந்தரமூர்த்தி நாயனரால், தேவாரம் பாடப்பட்ட காலகட்டத்தில், திருப்புக்கொளியூர் என்று அழைக்கப்பட்ட, அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், கொங்கேழு சிவாலயங்களில் முதன்மையானது. அவிநாசி மட்டுமின்றி, நம் மாவட்டத்தின் அடையாளமாக விளங்கும் இக்கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை தேரோட்டம் வெகு பிரசித்தம்.
உள்ளூர் மட்டுமின்றி, பிற மாவட்டம், வெளி மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் பங்கேற்றனர். அவிநாசி மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள தங்கள் உறவினர் வீடுகளில் தங்கிச் செல்வர். பண்டிகை காலம் போன்றே, அந்நாட்களில் உற்சாகம் இருக்கும்.
தற்போது, 14 ஆண்டுக்கு பின், இக்கோவிலில் வரும், 2ல், கும்பாபிேஷகம் விமரிசையாக நடத்தப்படுகிறது. இவ்விழாவிற்கு மேலும் மெருகேற்றும் வகையில், அன்றைய தினம், உள்ளூர் விடுமுறையும் விடப்பட்டிருக்கிறது.
கோவில் நிர்வாகத்தினர், பல்வேறு பொது நல அமைப்பினர் மற்றும் ஹிந்து அமைப்பினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கோரிக்கை ஏற்று, உள்ளூர் விடுமுறை விடப்பட்டிருக்கிறது. இதனால், அவிநாசி கோவிலுக்கு கூடுதல் பெருமை கிடைத்திருக்கிறது.