/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ சாலைகளில் கால்நடைகள் வாகன ஓட்டிகள் தவிப்பு சாலைகளில் கால்நடைகள் வாகன ஓட்டிகள் தவிப்பு
சாலைகளில் கால்நடைகள் வாகன ஓட்டிகள் தவிப்பு
சாலைகளில் கால்நடைகள் வாகன ஓட்டிகள் தவிப்பு
சாலைகளில் கால்நடைகள் வாகன ஓட்டிகள் தவிப்பு
ADDED : ஜூன் 13, 2025 10:49 PM

திருப்பூர்; திருப்பூரில், வாகன போக்குவரத்து நிறைந்த ரோடுகளில் கூட, சிலர் கால்நடைகளை திரிய விடுகின்றனர். அவை, நடு ரோட்டில் நின்றபடி, போக்குவரத்துக்கு பெரும் இடையூறை ஏற்படுத்தி வருகிறது. 'வீடுகளில் வளர்க்கப்படும் கால்நடைகளை பொது இடங்களில் திரிய விடக் கூடாது' என, அந்தந்த உள்ளாட்சி நிர்வாகங்கள் சார்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டு வருகிறது.
அவ்வாறு, திரிய விடப்படும் கால்நடைகள், உள்ளாட்சி நிர்வாகத்தினரால் பிடிக்கப்பட்டு, பட்டிகளில் அடைக்கப்படும். அதன் உரிமையாளர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்ட பின்பே, அவை, விடுவிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இருப்பினும், கால்நடை வளர்ப்போர் இந்த அறிவுறுத்தலை கடைபிடிப்பதுமில்லை; உள்ளாட்சி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுப்பதுமில்லை.