/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ அரசு மேல்நிலைப்பள்ளியில் இலக்கிய மன்றம் துவக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் இலக்கிய மன்றம் துவக்கம்
அரசு மேல்நிலைப்பள்ளியில் இலக்கிய மன்றம் துவக்கம்
அரசு மேல்நிலைப்பள்ளியில் இலக்கிய மன்றம் துவக்கம்
அரசு மேல்நிலைப்பள்ளியில் இலக்கிய மன்றம் துவக்கம்
ADDED : ஜூலை 03, 2025 08:39 PM

உடுமலை; பூலாங்கிணர் அரசு மேல்நிலைப்பள்ளியில், மகிழ் முற்றம் இலக்கிய மன்ற துவக்க விழா நடந்தது.
பள்ளியில் நடந்த இந்த விழாவிற்கு, தலைமையாசிரியர் கணேசன் தலைமை வகித்தார். ஆசிரியர் சரவணன் வரவேற்றார். மகிழ் முற்றம் பொறுப்பாசிரியர் ராதா, மகிழ் முற்றம் மன்றம் குறித்து விளக்கமளித்தார்.
வணிகவியல் ஆசிரியர் அபிதா, நுகர்வோர் பாதுகாப்பு குறித்து பேசினார். 'அறிவியல் மன்றம் மற்றும் வானவியல் மன்றத்தின்' செயல்பாடுகள் என்ற தலைப்பில், ஆசிரியர் சுரேஷ்குமார் பேசினார். ஆசிரியர் ஜான்பாஷா நன்றி தெரிவித்தார். மாணவர்கள் மன்ற உறுதிமொழி எடுத்தனர்.