/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ஊதியூர் மலையில் மீண்டும் சிறுத்தையா?ஊதியூர் மலையில் மீண்டும் சிறுத்தையா?
ஊதியூர் மலையில் மீண்டும் சிறுத்தையா?
ஊதியூர் மலையில் மீண்டும் சிறுத்தையா?
ஊதியூர் மலையில் மீண்டும் சிறுத்தையா?
ADDED : பிப் 12, 2024 12:56 AM
திருப்பூர்:திருப்பூர் அருகேயுள்ள ஊதியூர் மலை, 13 கி.மீ., சுற்றளவு கொண்டது. பல அரிய மூலிகைகள் வளர்வதோடு, மான், குரங்கு, கீரி, முள்ளம்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் வசிக்கின்றன.
மலையில், உச்சிபிள்ளையார் கோவில், கொங்கண சித்தர், செட்டித்தம்பிரான் கோவில், மலைக்கன்னிமார் கோவில், உத்தண்ட வேலாயுதசாமி கோவில் உள்ளிட்டவை உள்ளன.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊதியூர் மலையை ஒட்டியுள்ள பகுதியில், இடம்பெயர்ந்து வந்த சிறுத்தை, கால்நடைகளை தாக்கி வந்தது.
கண்காணிப்பு கேமரா பொருத்தி, கூண்டுகளை வைத்தும் சிறுத்தையை பிடிக்க முடியவில்லை. பாதுகாப்பு கருதி, மலையில் உள்ள கோவில்களுக்கு பக்தர்கள் செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர். பின், இரு மாதங்கள் முன்பு தான் இதற்கான தடை நீக்கப்பட்டது.
நேற்றுமுன்தினம் மதியம் மலைகோவிலுக்கு சென்ற ஒரு பெண், அங்கு சிறுத்தையை பார்த்தாகவும், அந்த சிறுத்தை ஒரு குரங்கை பிடித்து தின்றதாகவும் செய்தி பரவியது. இதனால், மீண்டும் சிறுத்தை வந்து விட்டதாக எண்ணி மக்கள் பீதியடைந்தனர்.
இதுகுறித்து காங்கயம் வனச்சரகர் தனபால் கூறுகையில், ''சிறுத்தையை பெண் பார்த்ததாக வந்த தகவலின் அடிப்படையில் ஆய்வு செய்தோம். மக்கள் நடமாட்டம் உள்ள நேரத்தில் வர வாய்ப்பு குறைவு.
அப்பகுதியில் ஆய்வு செய்ததில் குரங்கை பிடித்து தின்றதற்கான தடயங்களோ, கால் தடங்களோ இல்லை. எனவே, இது வெறும் புரளியாக இருக்கும்'' என்றார்.