/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/தொழிற்சங்க மையம் சார்பில் சட்ட விழிப்புணர்வு கூட்டம்தொழிற்சங்க மையம் சார்பில் சட்ட விழிப்புணர்வு கூட்டம்
தொழிற்சங்க மையம் சார்பில் சட்ட விழிப்புணர்வு கூட்டம்
தொழிற்சங்க மையம் சார்பில் சட்ட விழிப்புணர்வு கூட்டம்
தொழிற்சங்க மையம் சார்பில் சட்ட விழிப்புணர்வு கூட்டம்
ADDED : ஜன 02, 2024 11:27 PM
உடுமலை;உடுமலையில், இந்திய தொழிற்சங்க மையம் சார்பில், சட்ட விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
கூட்டத்துக்கு, சி.ஐ.டி.யு., மாவட்ட குழு உறுப்பினர் விஸ்வநாதன் தலைமை வகித்தார். சி.ஐ.டி.யு., மாவட்ட துணைச்செயலாளர் ஜெகதீஸ், மாவட்ட துணைத்தலைவர் எல்லம்மாள் முன்னிலை வகித்தனர். தலைவர் ரங்கநாதன் வரவேற்றார்.
பாதிக்கப்பட்டோர் கழகத்தின் தலைவர் கணேசன், 'நீதிமன்ற நடைமுறைகள், இந்திய அரசியலமைப்பு சட்டம், உரிமையியல் விசாரணை முறை,' சட்டம் குறித்து பேசினார். துணைத்தலைவர் ராதாகிருஷ்ணன், 'வழக்கு தாக்கல் செய்யும் முறை' குறித்தும், மாநில செய்தி தொடர்பாளர் ரவிச்சந்திரன், 'தகவல் ஆணையமும், உண்மையும்', என்ற தலைப்பில் பேசினர்.
கட்டட கட்டுமான தொழிலாளர் சங்க தொழிலாளர் கனகராஜ், ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.